ஞாயிறு, 19 அக்டோபர், 2014

Jeyalalitha : கவலை இல்லை, அஞ்ச மாட்டேன், தளர்ந்து போக மாட்டேன் !

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா தற்போது ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. கொஞ்ச நஞ்ச நெருப்பா கொடைநாடு முதல் கோடிகள்  பறக்குதே? பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.  அம்மணி உங்களுக்கு எங்கே இடர்பாடு அல்லாம் மக்களுக்குதாய்ன் வீட்டை  எரித்து  சோறு ஆக்கும் முட்டாள் கூட்டம் என்பது நல்லாவே தெரியறது ?
அ.தி.முக. என்னும் பேரியக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உன்னையே நீ அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்" என்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். என்னிடம் பெற்றுக் கொண்ட சத்தியத்தை இதயத்தில் ஏற்று நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேற இன்னான்னா சத்தியம் வாங்கினாக ? விலாவாரியா சொல்றது ? அடேங்கப்பா இன்னா தியாகம் ?
தொடர்ந்து அந்தப் பாதையிலேயே என்னுடைய பயணம் அமையும்

அ.தி.மு.க.வின் வளர்ச்சி; என் உயிரினும் மேலான எனது தலைமைக் கழக உடன்பிறப்புகளின் நலன்; எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், உயர்வு, இவை தான் என் இதயத்தில் என்றைக்கும் நான் பதித்து வைத்திருக்கும் இலக்குகள். இன்னுமா இலக்குகள் ? இன்னும் எத்தனை மிடாசோ எத்தனை  எஸ்டேட்டுகளோ?
இந்தப் பாதையில் என்னுடைய பயணம் நடைபெறும் போது ஏற்படுகின்ற இன்னல்களைப் பற்றியோ, துயரங்களைப் பற்றியோ, சோதனைகளைப் பற்றியோ, வேதனைகளைப் பற்றியோ நான் சிறிதும் கவலைப்படுவதில்லை. நீ  கவலைப்படமாட்டே  எதுக்குண்ணே கவலைபடனும் ? எல்லாமே அள்ளிக்கோ அள்ளிக்கோன்னு நல்ல மெஜாரிட்டி இருக்குல்ல ?
இந்தத் துயரங்கள் ஏற்படுத்துகின்ற வலி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதைத் தாங்கிக் கொள்கின்ற மனப் பக்குவத்தை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான் அப்ப குன்ஹாவுட்ட கெஞ்சியது உடல் உபாதை வயசுன்னு ஒப்பாரி வச்சது ?
அ.தி.மு.க உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் என்றைக்கும் நான் உழைப்பேன்; எந்தத் தியாகத்தையும் மேற்கொள்வேன் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். முதல்ல சொந்த தங்கச்சி சொந்தபந்தங்களை கவனிங்கபுண்ணியமாபோகும் ?

என் மீது பாசமும், பற்றும் கொண்டுள்ள தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: