பண முதலைகளுக்கு சுவிஸ் வங்கிகள் ‘திடீர்’ நெருக்கடிசுவிஸ்
வங்கிகள் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் கருப்பு
பணத்தை குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் வெளிநாட்டு வங்கிகளில்
கருப்பு பணம் குவித்துள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் இதுவரை பகிரங்கமாக
வெளியிடப்படவில்லை.இதை
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. ‘இந்தப்
பட்டியல் விரைவில் வெளியிடப்படும், அது காங்கிரசுக்கு நெருக்கடியை
ஏற்படுத்துவதாக அமையும்’ என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஆங்கில
செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார். இதையும் காங்கிரஸ் கடுமையாக
எதிர்த்தது.இந்தநிலையில்
இந்த விவகாரத்தில் பிரச்சினையில் சிக்காமல் தவிர்ப்பதற்காக சுவிஸ்
வங்கிகள், கறுப்பு பண முதலைகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிய
வந்துள்ளது.அதாவது,
சுவிஸ் வங்கிகளில் பெருமளவுக்கு கணக்கில் காட்டாத கறுப்பு பணத்தை
குவித்துள்ள 4 கறுப்பு பண முதலைகளை அந்த வங்கிகள் தொடர்பு கொண்டுள்ளன.
இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த வங்கிகளில் ரகசிய கணக்குகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.டிசம்பர்-31 கெடு:இந்த 4 பேரில் 3 பேர் மும்பையை சேர்ந்தவர்கள், ஒருவர் டில்லியை சேர்ந்தவர் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. டிசம்பர் 31-ந் தேதிக்குள் இவர்கள் தங்களது கறுப்பு பணத்தை வங்கியில் இருந்து திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என கெடு விதித்துள்ளதாம்.இதற்கிடையே சுவிஸ் வங்கிகளில் இந்திய பிரஜைகள் யாரேனும் புதிதாக ரகசிய கணக்கு தொடங்குகிறபோது, இது தொடர்பான தகவல்கள் தானாகவே இந்தியாவுக்கு கிடைக்க உதவும் வழிமுறை ஒன்றை சுவிஸ் நாடும், இந்தியாவும் தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.nakkheeran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக