செவ்வாய், 21 அக்டோபர், 2014

Hariyana: காளைமாட்டின் விலை 7 கோடி ரூபாய்க்கும் அதிகம் ! விற்க மறுத்த காளைமாட்டின் உரிமையாளர் !


ஹரியானா: உத்தரப் பிரதேசத்தில் ஒரு மாட்டிற்கு 7 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டும் அதன் உரிமையாளர் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மீரட் நகரில்  கால்நடைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின் காளைமாடு  மிகச்சிறந்த காளைமாடாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 14 அடி நீள எருமை: முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற அந்த மாடு  14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது
“பலே” எருமை யுவராஜ்: யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல் 5 மில்லி வரை விந்தணு எடுக்கப்பட்டு 35 மில்லி வரை செறிவாக்கம் செய்யப்படுகிறது. 0.25 மில்லி கொண்ட ஒரு குப்பி விந்தணு ரூபாய் 1500 க்கு விற்கப்படுகிறது.
வருஷத்துக்கு 50 லட்சம்: அந்த வகையில் யுவராஜ் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் வரை உரிமையாளருக்கு சம்பாதித்து கொடுக்கிறது. அடடா இத்தாய்ன் மச்சகாளைன்னு சொல்லுதாகளோ ? ம்ம்ம் நாம  பெருமூச்சுவிட்டு.....
முர்ரா வகை மாடுகள்  சராசரியாக நாளொன்றுக்கு 25 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. 
வாரிசுகளின் பலம்: அதுவும் யுவராஜின் வாரிசுகள் அதிக வீரியமிக்கவையாக உள்ளதால் 25 லிட்டரையும் தாண்டி பால் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் யுவராஜுக்கு அவ்வளவு கிராக்கியாம்.

கருத்துகள் இல்லை: