செவ்வாய், 21 அக்டோபர், 2014

ஜெயலலிதாவை பார்பனர்கள் மட்டும்தான் உண்மையாக நேசிக்கிறார்கள் ? (பிராமணன்னாலே அறிவுஜீவிதாண்டா பிரம்மஹத்தி).

பன்றிகள் ஒருபோதும் வானத்தைப் பார்ப்பதில்லை, பார்த்தும் ஆகப்போவது ஒன்றுமில்லை.
ஜெயா பரப்பன அக்ரஹாராவில் செட்டில் ஆகி திரும்பிய இந்த சிறிய இடைவெளி தமிழக அரசியல் வட்டாரங்களில் பல கலவையான விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது. அடிமட்ட அதிமுக தொண்டர்கள் திடீர் அதிருஷ்ட்டத்தை சந்தித்ததில் திகைத்துப் போயிருக்கிறார்கள். மனிதசங்கிலி, பால்குடம், உண்ணாவிரதம், மொட்டைபோடுவது என ரகவாரியான வேலைகள் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் அவர்களுக்கு கிடைத்தது.
அதிமுக நிர்வாகிகள் நிலை சற்று மோசம்தான், மம்மி ஜெயா டிவி மட்டுமே பார்ப்பவர் என்பதால் தினமும் ஒரே மாதிரி போராட்டத்தை அவர் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தால் போரடிக்கும். ஆகவே புதிய போராட்ட யோசனைகளை அவர்கள் செயல்படுத்தினார்கள், அதற்கு ஆள்பிடிப்பது செலவு செய்வது என கடுமையான கழகப் பணிகள் அவர்களுக்கு இருந்தன. ஜெயா டிவியின் வீடியோ பதிவுகள் மட்டுமே அதிமுகவில் ப்ராக்ரஸ் கார்டு என்பதால் அதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்தாக வேண்டிய வேலை வேறு
செ.கு.தமிழரசன், சரத்குமார் உள்ளிட்ட பெரும்பாலான போயஸ்கார்டன் வாயிற்காவலர்கள் போதுமான அளவுக்கு தங்கள் இருப்பை பதிவு செய்துவிட்டார்கள். சில நாட்களாக தற்செயல் விடுப்பில் இருந்த சீமான் நெடுமாறன் ஆகிய தமிழ்தேஷ் தலைவர்களும் ஜெயாவின் மனம் கோணாதவாறு அறிக்கை விட்டாயிற்று. ஜெயா கும்பலின் சாராயக் கம்பெனிகளை நிர்வகித்த சோ ராமசாமிகூட சுப்ரீம் கோர்ட்டில் தங்கள் தரப்பு எப்படி ஜெயிக்கும் என்பதை மேலோட்டமாக துக்ளக்கில் எழுதிவிட்டார்.
இப்படி அதிமுகவின் அடிமைகளும் நட்பு சக்திகளும் தங்களது கடமையை ஆற்றிய பிறகும் முக்கியமான சில குழுக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறன, அதில் ஒன்றுதான் பாஜக.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏவப்பட்ட மங்கல்யான் விண்கலத்தையே மோடியின் சாதனை என தம்பட்டம் அடிக்கும் பாஜக இந்த தீர்ப்பைப் பற்றி மட்டும் பேச மறுக்கிறது. டைம்ஸ் நவ் அர்ணாப் கோஸ்வாமி பிராமண தலைவர்களுக்கு எதிராக கேள்வி கேட்பதென்பது வாழ்நாள் அதிசயம். அப்படிப்பட்ட அர்ணாபே இந்த தீர்ப்பு குறித்த பாஜகவின் கருத்து என்ன என்று அதன் செய்தித் தொடர்பாளரிடம் பத்து நிமிடம் விடாமல் கேள்வி கேட்கிறார். ஆனாலும் கடைசிவரை அவரால் பாஜகவின் கருத்தைப் பெற முடியவில்லை.
தீர்ப்பு வெளியான முதல் வாரத்தில் தமிழக பாஜக தலைவர்கள் இது பாஜக தமிழகத்தில் வலுவாக காலூன்றுவதற்கான நேரம் என சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களும் மவுனம் காக்கிறார்கள். கல்யாண வீட்டில் வெற்றிலைக்கு சுண்ணாம்பு வாங்கிக்கொடுத்தாலே இது நான் நடத்தி வைக்கும் கல்யாணம் என பெருமையடிக்கும் இயல்பு கொண்ட பாஜக தலைவர்களுக்கு என்னாயிற்று என யோசிக்கையில்தான் ஒரு உண்மை உரைக்கிறது, அதாவது மேக்கப் புருஷ் மற்றும் பேன்சி டிரஸ் பீஎம் மோடி அவர்கள் இன்னமும் இது குறித்து ஒரு கருத்தும் சொல்லவில்லை.
பாஜக ஒரு வைரசைப் போன்றது; அதனால் இன்னொரு உயிரைப் பற்றிக்கொண்டு மட்டுமே வளர இயலும். சிறையில் இருந்து விடுதலையாவதற்காக வெள்ளையனின் காலைப் பிடித்த வீரசாவர்கர் காலம் தொட்டே அது இசுலாமியர்கள் மீதான துவேஷம் எனும் ஒற்றைக் கருத்தாக்கத்தை கொண்டு வளர்ந்தது. ஆனால் தமிழகத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற இசுலாமிய வெறுப்பு மட்டும் போதாது. தமிழக மக்களில் பெரும்பான்மையானவர்கள் மாட்டு மூத்திரத்தை மாட்டு மூத்திரமாக மட்டுமே கருதும் இயல்புகொண்டவர்கள் என்பதால் இங்கே சில கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்றன.
அதற்காகத்தான் நடிகர் ரஜினியை இழுக்க முயற்சி செய்கிறார்கள். பாஜக சகவாசத்தால் விஜயகாந்துக்கு ஆன கதியை நினைத்தோ என்னவோ கன்னட பாபா இழுத்தடிக்கிறார். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு பெரிய கஷ்டங்கள் இருக்காது எனும் உத்திரவாதம் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கு வர என்றைக்கோ ஆண்டவனின் கட்டளை கிட்டியிருக்கும் (இப்படி மனதுக்குள் கேட்கும் குரலுக்கு காத்திருப்பது சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே சரி. சாதாரண மக்கள் இந்த பிரச்சனையை உடனே கவனிக்க வேண்டும். மனத்துக்குள் ஒலிக்கும் ஒரு குரல் உங்களை வழிநடத்துவதென்பது ஸ்கீசோஃப்ரேனியா எனும் கடுமையான மனச்சிதைவு நோய்க்கான மிக முக்கியமான அறிகுறி.)
ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் ஒட்டுமொத்த பலனையும் பாஜக பக்கம் கொண்டுபோக கடும் முயற்சி செய்த ஊடகங்கள் துணையோடு  ஜெயாவுக்கான தண்டனையையும் பாஜகவின் சாதனையாக காட்டிவிடும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது (ஊழலை ஒரு சதவிகிதம்கூட சகித்துக்கொள்ள முடியாது என்பது கார்பரேட் காதலரின் வீரமுழக்கங்களில் ஒன்று). மேலும் இந்த வழக்கின் காரணகர்த்தாக்களில் ஒருவரான சுப்ரமணியசாமி எனும் ஹைகிளாஸ் தரகன் இப்போது பாஜகவில் இருக்கிறார். ஜெயா கைதின் பலனை அறுவடை செய்ய வாய்ப்பிருக்கும் திமுக பெரும் மௌனத்தில் இருக்கிறது. ஆகவே இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள எல்லா வாய்ப்பும் இருப்பதாக பாஜக உள்ளூர் த(வ)ளைகள் ஆரம்பத்தில் கருதின.
தங்கத்திலேயே கக்கூஸ் கட்டினாலும் ஆண்டவன் அருளின்றி ஆய் போக முடியுமா சொல்லுங்கள்? அப்படியான ஒரு அனுகிரஹம் பாஜகவின் மூலமாகிய மோடியிடமிருந்து கிடைக்கவில்லை (மூலம் என்றால் அந்த ”மூலமல்ல” ). குஜராத்தின் சந்தானபராதியோ இந்த வழக்கை கண்டுகொள்ளாமல் ரஜினிக்கு அழைப்பு விடுப்பதன் வாயிலாக லிங்கா பட பிரமோஷனுக்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் எந்த நகர்வும் மத்திய பாஜகவில் இல்லை. இந்த தருணத்தை விட்டுவிட்டால் இனி இன்னொரு வாய்ப்புக்கு வழியில்லை, சுச்சா பாரத் உச்சா பாரத் மாதிரி ஏதாவது அறிவித்தாலும் அது தமிழகத்தில் எடுபடாது. இருக்கிற சுள்ளான் ரவுடிகளை வைத்து பிள்ளையார் ஊர்வலம் நடத்தவே நாக்கு தள்ளுகிறது,
இந்த அழகில் கம்யூனிசமும் பெரியார் கருத்துக்களும் இன்னமும் செல்வாக்கோடு இருக்கும் தமிழகத்தில் எங்கிருந்து கலவரம் நடத்தி என்றைக்கு ஆட்சியைப் பிடிப்பது? இந்த வயிற்றெரிச்சல்தான் பாஜக தமிழ்நாட்டு தலைவர்களின் முகபாவங்களில் வெளிப்படுகிறது. வழக்கின் அனுகூலத்தையும் விடவும் மனமில்லாமல், ஒரு பிராமண தலைவரை விமர்சிக்கவும் முடியாமல் அல்லல்படும் அவர்களது முகம் பரிதாபகரமானதாக இருக்கிறது.
திக்கு தெரியாமல் தடுமாறும் இன்னொரு குரூப், சாட்சாத் பிராமண அறிவுஜீவிகள்தான் (பிராமணன்னாலே அறிவுஜீவிதாண்டா பிரம்மஹத்தி). காங்கிரஸ் ஆட்சியில் கிருஸ்துவர்களும் அப்பிராமணர்களும் செய்த ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தபடியால் இவர்கள் கொஞ்சம் ஓவராகவே தர்ம நியாயம் பேசிவிட்டார்கள்.
ஊழலுக்கு கடும் தண்டணை கொடுக்க வேண்டும், ஊழலை ஒழித்தால் இந்திய பொருளாதாரம் நட்டுக்கொள்ளும் என பல சின்னஞ்சிறு கதைகள் பேசி அண்ணா ஹசாரே போராட்டங்களில் வேலைமெனக்கெட்டு விளக்கு பிடித்து (மெழுகுவர்த்திங்க) ஊழல் எதிர்ப்பு போராளிகளாக ஃபார்ம் ஆகிவிட்ட சங்பரிவாரத்தின் வெள்ளைக் காலர் பிரிவு இந்த தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தவிக்கிறது. பார்ப்பனன் வீட்டு தக்காளிச் சட்னி சூத்திரனின் ரத்தத்தைவிட மதிப்பு வாய்ந்தது எனும் மனுதர்மாவின்படி கொஞ்சம் மனதைத் தேற்றிக்கொண்டுதான் அவர்களால் பேச முடிகிறது. ஆனாலும் தாங்கள் பேசும் வார்த்தைகள் இனி தண்டனை பெறப்போகும் சூத்திரர்களுக்கு சாதகமாகிவிடக்கூடாது எனும் ஜாக்கிரதை உணர்வும் அவர்கள் வசம் இருப்பதால் பெரும் சிரமத்துடனேயே அவர்கள் பேசுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சட்டப்படி சலுகை வழங்குவதுகூட கல்வியின் தரத்தை பாதிக்கும் என நியாயம் பேசும் பானு கோம்ஸ் எனும் போராளி ஜெயாவின் குற்றத்தை மட்டும் பார்க்காதே அவர் செய்த நல்லவைகளையும் பார் என்கிறார். லாலுவுக்கு ஜாமீன் மறுக்கப்படது என்பதால் ஜெயாவுக்கும் மறுக்க வேண்டும் என கட்டாயமில்லை என்கிறார் பத்ரி சேஷாத்ரி. எந்த ஆதரங்களின் அடிப்படையில் ஜெயா தண்டிக்கப்பட்டாரோ அதே  அடிப்படையில் அவரை இன்னொரு கோர்ட் விடுவிக்கவும் முடியும் என்கிறார் சோ ராமசாமி.
ஆகப்பெரும்பாலான இந்த வகையறா ஆட்கள் இந்த தீர்ப்பு சரி என்றோ தவறென்றோ சொல்லாமல் இன்னும் அப்பீல் இருக்கிறது அங்கே நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பிருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். ஃபேஸ்புக் மொழியில் சொன்னால் இது ஒரு குறியீடு.. சுப்ரீம் கோர்ட் எங்கள் ஏரியா என்று அதற்கு பொருள். பார்ப்பனரை மணந்து பார்ப்பனரகவே மாறிவிட்ட எம்.எஸ். சுப்புலட்சுமியைப்போல பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு பார்ப்பனராகவே மாறிவிட்ட கம்யூனிஸ்ட் ஆட்களும் இதையே சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் கவனத்துக்காக ஒன்றைச் குறிப்பிட வேண்டிய அவசியம் வருகிறது “ சுப்புலட்சுமி மடிசார் கட்டுவதை காலமான காஞ்சி சங்கராச்சாரி ஏற்றுக்கொள்ளவில்லை” அவாஅவா, அவாஅவா ஆச்சாரப்படிதான் நடந்துகனும் என்பதே அவரது அருள்மொழி.
vinavu.com

கருத்துகள் இல்லை: