ஊழல் குற்றவாளி பாசிச ஜெயா கைது நடவடிக்கைக்குப்பின்
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போல் ஆட்டம் போட்டது தமிழக
காவல்துறை!
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் துவாக்குடி ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் அ.தி.மு.கவின் அடியாள் படையாகவே செயல்பட்டு அம்பலப்பட்டு போயுள்ளனர்.
திருச்சி மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், மத்திய தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்த முயலும் பா.ஜ.க அரசின் சதித்செயலை கண்டித்து அக்டோபர் 30.09.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக அனுமதி பெற்று இருந்தனர். இதற்கிடையே ஜெயாவை குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைத்தது பெங்களுரு நீதிமன்றம். கைதை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் நடத்தபோவதாகவும், எனவே, பு.ஜ.தொ.முவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியை ரத்து செய்வதாகவும் கூறினார், அமைச்சர் கோகுல இந்திராவின் கொழுந்தனாரும் திருவெறும்பூர் ஆய்வாளருமான பாஸ்கர்.
எனவே, பு.ஜ.தொ.மு தோழர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர் தண்டபாணி ஆகியோர் காவல் ஆய்வாளர் பாஸ்கரை நேரில் சந்தித்து, திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்த தங்களுக்கு அனுமதியளிக்கவேண்டும், கொடுத்த அனுமதியை மறுப்பது ஜனநாயக விரோதமானது என எடுத்துக்கூறினர்.
அதிமுக ஆய்வாளர் பாஸ்கர், “என்னய்யா ரொம்ப அறிவாளித்தனமா பேசுற, உங்க தலைவர உள்ளபுடிச்சி போட்டா சும்மா இருப்பியா, அம்மா வெளியவரவரைக்கும் யாருக்கும் அனுமதி கிடையாது. அரசாங்கம், போலீசோட அனுசரிச்சு போங்கயா” என கூறினார்.
தோழர் தண்டபாணி, “மரியாதையா பேசுங்க, எங்கள் தலைவர்கள் மக்கள் சொத்த கொள்ளையடிக்கிற சமூகவிரோத செயல செய்யமாட்டாங்க! மக்களுக்கு பொறுப்பான அதிகாரி நீங்க, அத மறந்துட்டு பேசாதீங்க, கோடிக்கணக்கான தொழிலாளர் பிரச்சனைக்காக நாங்க மாலை நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முறையான அனுமதி பெற்றுள்ளதை தடுப்பது நியாயமில்லை. தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிங்க” என்றார்.
ஆத்திரமான அந்த ஆய்வாளர், “நான்யார் தெரியுமுல்ல, என் படிப்பு, உத்யோகம், சர்வீஸ் தெரிஞ்சு பேசுடா, அமைச்சர் கோகுல இந்திரா கொழுந்தன்னா டிப்பார்ட்மென்ட்டே யோசிக்கும். இந்த சட்டையபோட்டுதான் சம்பாரிக்குனுமுன்னு அவசியமில்லடா. பெரிய மசுரு மாதிரி என்கிட்டயே பேசுர, கைய, கால ஒடைச்சி உள்ள தள்ளிடுவேன்” என எகிறினார்.
இவர் செயலை கண்டித்து திருச்சி நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி அம்பலப்படுத்தினர் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள். பதறிப்போன அந்த அதிகாரவர்க்க சூரப்புலி பாஸ்கர் எரிச்சலடைந்தார்.
அடுத்த நாள் காலையிலேயே போலீசை வீட்டுக்கனுப்பி தோழர் தண்டபாணியை கைது செய்து மாலை வரை திருவெறும்பூர் காவல்நிலையம் கொண்டுவராமல் உறவினர் வீடு, போலீசு வாகனம் என சட்டவிரோதமாக அடைத்து வைத்து…”ஏன்டா என்னோட பவரைபத்தி தெரியாம மோதுர, என் பேரு, என் குடும்பத்தையே போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கயா, யாரெல்லாம் சேர்ந்து எனக்கெதிரா போஸ்டர் ஒட்னீங்க… உன்னை போட்டுதள்ள ஒரு குண்டு போதும், எனக்கு ஒரு என்கொயரிதான்… மனித உரிமை, மயிறு உரிமைன்னு இனியும் பேசுனா கொன்னுடுவேன்” என மிரட்டினார்.
மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இந்த பாஸ்கரை தொடர்பு கொண்டு பேசிய போதெல்லாம் தாங்கள் கைது செய்யவில்லையென்றும் இரவு ரோந்து சென்றதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் கூசாமல் பொய் பேசினார்.
இவரது சட்டவிரோத நடவடிக்கையை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து கண்டித்தனர் வழக்குரைஞர்கள். ‘ “ஆமாம் கைது செய்திருக்கிறார்கள், கோர்ட்டுக்கு கொண்டுவருவார், அங்கே பாருங்கள்” என நழுவிகொண்டார் திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளர். இதைச் சொல்ல அவருக்கு பல மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.
இறுதியாக, தனக்கெதிராக போஸ்டர் ஒட்டியது என்று வழக்கு போடாமல் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் விதமாக அ.தி.மு.கவை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதாக கொஞ்சமும் நேர்மையே இல்லாமல் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இதற்கேற்ப தனது கூட்டாளியும், கட்டப்பஞ்சாயத்து புதுபணக்கார ரவுடியுமான கிருஷ்ணா சமுத்திரம் அ.தி.மு.க பஞ்சாயத்துத் தலைவர் சிவாஜி என்பவரிடம் பொய் புகார் பெற்றுக்கொண்டார். இப்படி அ.தி.மு.க காலிகளும், திருவெறும்பூர் காவல் ஆய்வாளரும் யாருக்கு யார் எடுபிடி என்று தெரியாத வண்ணம் ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து போயுள்ளனர். மேலும் தனது நண்பரான துவாக்குடி அ.தி.மு.க நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், மற்றும் துவாக்குடி ஆய்வாளர் மூலமாக பொய்புகாரின் அடிப்படையில் பகுதி தோழர்கள் சாகுல் என்பவரை இதே பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்தது. தாஸ் என்ற தோழரை கைது செய்ய தேடியபோது அவர் இல்லாததால் அவர் தம்பிகள் இருவரை கைது செய்து, ‘ தாஸை ஒப்படைச்சிட்டு இவன்களை கூட்டி போ ‘ என சட்டவிரோதமாக பிணை கைதி போல அடைத்து வைத்தார் துவாக்குடி ஆய்வாளர் ரமேஷ்குமார். அப்பகுதி மக்களை திரட்டி தோழர்கள் ஆய்வாளரின் இச்செயலை கண்டித்த பின்பே அவர்களை விடுவித்தனர். மேலும் சிலரை நள்ளிரவில் வீடு புகுந்து தேடியுள்ளது. பெண்கள், குடும்பத்தினரை அவமானப்படுத்தி துன்புறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் சட்டவிரோதமாக கடத்தி, கொலை மிரட்டல் விடுத்த ஆய்வாளரின் அராஜகத்தை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்பினருடன் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் மாவட்ட கண்காணிப்பாளரை மறுநாள் சந்தித்து முறையிட்டனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை -:
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்
“உங்கள் புகாரினை விசாரிக்கிறேன், சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கிறேன்.
உங்கள் தோழர்களை பிணையில் விட எதிர்க்க மாட்டோம்” என உறுதியளித்த பின்பே
தோழர்கள் கலைந்து சென்றனர். பத்திரிக்கை-ஊடகங்கள் மூலமாகவும் நமது
தொடர்ச்சியான நடவடிக்கைகளை கண்டும் அரண்டுபோன அந்த சூரப்புலி அவசர அவசரமாக
தானே செலவு செய்து திருவெறும்பூர், துவாக்குடி ஆய்வாளர்கள் மீது பொய்
புகார் கொடுத்த ம.க.இ.கவினரை கண்டிக்கிறோம் என பொது மக்கள் பேரில் போஸ்டர்
ஒட்டி மேலும் அம்பலப்பட்டுபோனார்.
மக்களோ… “ம.க.இ.க காரன் பேரு, போன் நம்பர் போட்டு தில்லா ஒட்டுவான், இந்த லஞ்சபேர்வழிக்கு எந்த பொதுமக்கள் போஸ்டர் ஒட்டுவான்” என காரி உமிழ்ந்தனர்.
சி.பி.எம், விடுதலைச் சிறுத்தைகள். த.மு.மு.க மற்றும் மாற்றுக் கட்சியினர் பலரும், “நாங்களும் இவனை எப்படி கண்டிக்கிறதுன்னு யோசிச்சிக்கிட்டுருந்தோம். வகையா ம.க.இ.க கிட்ட மாட்டிகிட்டான், விடாதீங்க” என தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
அ.தி.மு.க ஆய்வாளர் பாஸ்கர், மட்டுமல்ல காவல்துறையே சமூகவிரோத கும்பலாக சீரழிந்து கிடப்பதையும், இதனை ஒழிக்காமல் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை என்பதை விளக்கியும் திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தமாகி வருகிறது மனித உரிமை பாதுகாப்பு மையம்.
செய்தி vinavu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக