சென்னை:'தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டப் பணிகளை
விரைவில் முடிக்கக் கோரிய மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க
வேண்டும்; தவறினால், பொதுப்பணித் துறை செயலர், ஆவணங்களுடன் நேரில் ஆஜராக
வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு, தாமிரபரணி ஆறு, குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. தாமிரபரணியில் செல்லும் தண்ணீரில், 13 டி.எம்.சி., வீணாக கடலில் கலக்கிறது.இந்த தண்ணீரை கால்வாய் மூலம், ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம், திருச்செந்துார் பகுதிக்கு கொண்டு வந்தால், பல ஆயிரம் ஏக்கர் தரிசு நிலம் செழிக்கும். இந்த ஆட்சியில எல்லாமே கோர்ட் சொல்லி தான் செய்ய வேண்டியதா இருக்கு. அவ்வளவு ஏன் கட்சியின் தலைவிதியே இப்ப கோர்ட் கையில தான் இருக்கு..பேசாம கோர்டுகிட்ட ஆட்சிய கொடுத்துட்டா நல்லா இருக்கும்...
கடந்த 2006 - -07ல், தாமிரபரணியில் இருந்து, எம்.எல்.தேரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, நான்கு கட்டமாக திட்டம் வகுக்கப்பட்டு, இரண்டு கட்டப் பணிகள் முடிந்து விட்டன. மூன்றாம், நான்காம் கட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டும், 2012 முதல் எந்த பணியும் நடக்கவில்லை.இத்திட்டம் முடிந்திருந்தால், 50 ஆயிரம் ஏக்கர் நிலம், பாசனம் பெறும். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.மூன்று, நான்காம் கட்டப் பணிகளை முடிக்கக்கோரி,அரசுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. தாமிர பரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ் ஆஜரானார். அரசு தரப்பில் பதில் அளிக்க, இரண்டு வார காலஅவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இரண்டு வார காலஅவகாசம் கோரியது, வழங்கப்படுகிறது. பதில் மனு தாக்கல் செய்யத் தவறினால், பொதுப்பணித் துறை செயலர், ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும். விசாரணை, அக்., 31ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக