சனி, 27 செப்டம்பர், 2014

அதிமுக ரவுடிகள் அட்டகாசம் : கலைஞர் வீடு உட்பட திமுக தலைவர்கள் வீடுகள் தாக்குதல் ! போலீசார் பாராமுகம் !

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு விவரங்களை தந்தி டிவி உள்பட   பல்வேறு சானல்கள் ஓளிபரப்பின. .இதற்கிடையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாக தகவல் பரவியது. உடனடியாக மாநிலம் முழுவதும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டது இதனால் பொதுமக்களால் டி.வி. சேனல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்திருந்தால் மின்சார தடையை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலியால் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் கொந்தளிப்பு அடைந்து உள்ளனர்.இதனால் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் ஆங்காங்கே சாலைமறியல் மற்றும் உருவ பொம்மை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


சென்னை மாநகரில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக பகல் 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் அளித்த புகார்களை தொடர்ந்து, பகல் 2.45 மணிக்கு மேல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளான சென்டிரல், எழும்பூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாசாலைகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்சுக்காக பலர் காத்துக்கிடந்தனர்.

.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு எதிரொலி; தேனி மாவட்டம் கம்பத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்&திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூரில் கடையடைப்பு, அ.தி.மு.க.வினர் மறியல்பதற்றம். திண்டுக்கல்லில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவபொம்மை எரிப்பு.

விருத்தாசலத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உருவபொம்மைகள் எரிப்பு. பஸ்களை மறித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்.

நெல்லை தூத்துக்குடி

ஜெயலலிதா குற்றவாளி என கோர்ட்டு அறிவித்ததை தொடர்ந்து நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லையில் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். விளாத்திகுளத்தில் அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். விளாத்திகுளம் பஸ் நிலையம் முன் தனியார் பஸ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு எதிரொலி: ஈரோட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவபொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்.

மதுரை கோரிப்பானையத்தில் அதிமுகவினர் கல்வீச்சு;  மோட்டார் சைக்கிள்கள், கார்கள், கடைகள் நொறுக்கப்பட்டன. கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு; பஸ்கள் நிறுத்தப்பட்டன.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு. திருச்சியில் அ.தி.மு.க.வினர் திருச்சி மேலப்புலிவார்டு ரோட்டில் உள்ள மனோகரன் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக சென்று அந்த பகுதியில் இருந்த கடைகளை அடைக்க சொல்லி போராட்டம் நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து மேலப்புலிவார்டு ரோடு, மதுரை ரோடு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

மேலப்புலிவார்டு ரோட்டில் சென்ற ஒரு சரக்கு ஆட்டோவின் மீது அ.தி.மு.க.வினர் கல்வீசி தாக்கியதில் அதன் கண்ணாடிகள் உடைந்தன. இதேபோல் ஸ்ரீரங்கத்திலும் அ.தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. திருச்சி நகரில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. திருச்சி நகர் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

அரியலூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. இதேபோல் கரூரிலும் கடைகள் அடைக்கப்பட்டன. dailythanthi.com/ 

கருத்துகள் இல்லை: