சனி, 27 செப்டம்பர், 2014

அரிசி பக்கெட் சவாலை ஏற்ற லட்சுமி ராய்

சென்னை: அரிசி பக்கெட் சவாலை குடிசைப்பகுதியில் நிகழ்த்த முடிவு செய்துள்ளார் ராய் லட்சுமி.நரம்பு சம்பந்தப்பட்ட நோய் விழிப்புணர்வுக்காகவும், நிதி திரட்டவும் சர்வதேச அளவில் ஐஸ் பக்கெட் சேலன்ஜ் என்படும் ஐஸ் நீர் குளியல் போட்டி நடைபெற்றது. இதில் நடிகை ஹன்சிகா உள்ளிட்ட ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதே பாணியில் ரைஸ் பக்கெட் சேலன்ஜ் (அரிசி பக்கெட் சவால்) என்ற நிகழ்ச்சியில் சிலர் பங்கேற்றனர். பக்கெட் நிறைய அரிசியை ஏழைகளுக்கு வழங்குவதாக இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ராய் லட்சுமி பங்கேற்க முடிவு செய்துள்ளார். < அவர் கூறியதாவது: சிலருக்காவது நேரடியாக பயன்தரும் வகையிலான நிகழ்வில் பங்கேற்க  ஆசைப்படுகிறேன். எனவேதான் ரைஸ் பக்கெட் சேலன்ஜ் எடுக்க முன்வந்தேன். ஏற்கனவே இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பக்கெட் நிறைய அரிசி வழங்கி இருக்கிறேன். விரைவில் மலேசியாவிற்கு செல்ல இருப்பதால் அதற்கு முன்பாக இதில் பங்கேற்க உள்ளேன். மும்பை குடிசை பகுதியில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் குடிசை பகுதி மக்களுக்கு அரிசி வழங்க விரும்புகிறேன்.
இவ்வாறு ராய் லட்சுமி கூறினார். - See more at: .tamilmurasu.org<

கருத்துகள் இல்லை: