வெள்ளி, 26 செப்டம்பர், 2014

நடிகை சமந்தா சொந்தமாக படம் தயாரிக்க போகிறாராம் ! ம்ம் அனுபவம் பெறுவது பெருமை !

சென்னை: சமந்தா சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.ரஜினி, கமல், பிரபு தொடங்கி விஜய், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ் நடிகர்கள் சொந்தமாக படம் தயாரித்திருக்கின்றனர். நடிகைகள் தயாரிப்பு துறையில் இறங்குவது அரிது. துணிச்சலாக இறங்கிய ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா போன்ற சில நடிகைகள் கையை சுட்டுக்கொண்டனர். தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை தற்போது சமந்தாவுக்கு வந்திருக்கிறது. தமிழில் முன்னணி இடத்துக்காக போராடி வரும் அவர் தெலுங்கில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார். சமீபத்தில் புதுமுக இயக்குனர் ஒருவர் சமந்தாவிடம் கதை கூறினார். அது அவரை ரொம்பவே கவர்ந்தது. இதையடுத்து, ‘படத்தை தயாரிக்க எவ்வளவு பட்ஜெட் ஆகும், எத்தனை நாட்களுக்குள் படத்தை முடிக்க முடியும்‘ என்பதை கூறும்படி கேட்டிருப்பதுடன் அப்படத்தில் தான் நடிக்கப்போவதில்லை என்றும் கூறி இருக்கிறார். பட்ஜெட் விவரம் தெரியவந்தவுடன் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்க உள்ளாராம் சமந்தா. வாய்வார்த்தையோடு நிற்காமல் தயாரிப்பு துறையில் சமந்தா இறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - See more at: .tamilmurasu.org

கருத்துகள் இல்லை: