சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா,
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு தலா 10
கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக
ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பையடுத்து 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது ஜெயலலிதா தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மயக்கம் வருவதாகவும்
கூறினார். இதையடுத்து அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ
பரிசோதனை செய்யப்பட்டது maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக