North Korea admits to Kim Jong-un’s ill-health for first time
வடகொரியாவின் அரசியல் அந்நாட்டின் ஒப்பில்லா தலைவர் என்று கருதப்படும் கிம் ஜோங்-உன்னையே சார்ந்துள்ளது. 31 வயதாகும் இவர், கடந்த மூன்றாம் தேதி அவரே தேர்ந்தெடுத்த ஒரு பெண்கள் இசைநிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். அதன்பின்னர் அந்நாட்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்றபோது அவர் அதில் இடம் பெறவில்லை. இங்குதான் 100 சதவிகித வாக்குகளுடன் அவர் கடந்த மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மீண்டும் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளாதது, அவரது இருப்பிடம் குறித்த புதிய ஊகங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இதன்பின்னர் வெளியிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கிம் கடந்த ஜூலை மாதம் நடத்திய வழக்கமான ஆய்வுப் பயணம் ஒன்றைக் காட்டியது. அதில் அவர் தாங்கி நடப்பதுபோல் காட்சிகள் இருந்தன. அதுமட்டுமின்றி சற்று தளர்வான உடைகளை அவர் அணிந்திருந்தது அவரது உடற்பருமனையும், நடப்பதில் உள்ள சிரமங்களை மறைப்பதையும் வெளிப்படுத்தியது.
இதனால் தனது விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது அவர் காயமடைந்திருக்கலாம் என்று ஒரு செய்தி குறிப்பிடுகின்றது. கீல்வாதம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் அவர் அவதிப்பட்டுக்கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோல் தொடர்ந்து பல நாட்களுக்கு வெளியில் வராமல் இருப்பது அவரது பழக்கமான செய்கைகளில் ஒன்று என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், ஒவ்வொரு நாளும் அரசு தொலைக்கட்சியில் வழங்கப்படும் மாலை நேர முக்கிய செய்திகளுக்கு முன்னால் கம்பீரமான குரல் பின்னணியுடன் கிம்மின் முந்தைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் இருக்கின்றன.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக