பெங்களூரு: 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணபிப்க்க இயலாது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா
மற்றும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள்
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும்,
சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் வாதாடி அரசு வழக்கறிஞர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் பிறகு அவரது ஜூனியர் முருகேஷ் மராவடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்தபோது சொத்து சேர்த்தது நிரூபணமானதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்களை, ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் அனுபவித்ததால் அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நீதிபதி உத்தரவின் பேரில் 4 பேரும் உடனே பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணப்பிக்க இயலாது'' என்றார். vikatan .com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக