சனி, 27 செப்டம்பர், 2014

தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இல்லை ! அடுத்த முதல்வர் யாரென்று கன்னட சானல்களில் விவாதம்!

தீர்ப்பு விபரம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வரப்போகும் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இல்லை என்பது தற்போது நீதிமன்ற வழக்கத்தில் இருந்து தெரியவருகிறது,  தீர்ப்பு ஆங்கிலம் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் வாசிப்பதாலும் தாமதம் ஏற்படுகிறது, 
தமிழ் நாடு முழுவதும ஓரளவு பதட்டம் காணப்படுகிறது. அதிமுக குண்டர்கள் பெரிய அளவில் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்ற பயத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதே பாதுகாப்ப்பு என்று தெரியவருகிறது. திமுக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் கூட சரியான பாதுகாப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான், 
திமுக தலைவர் கருணாநிதியின் வீடு மற்றும்  திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இதனால் பெங்களூரே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கண்காணி்பும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பாதகமாக வந்தால் அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் திமுகவினர் பெருமளவில் இங்கு குவிந்து வருகின்றனர். அதேபோல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும் திமுகவினர் குவிந்துள்ளனர்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: