வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஈரான் நடிகைக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகள் ! Nude activists supporting Golshifteh Farahani after the actress was banned from Iran


'கொல்ஷிஃப்தே ஃபரஹானி’... ஈரான் நாடே ஆச்சர்யமாக முணுமுணுக்கும் நடிகை. ஈரான் சினிமாவில் 'கோல்டன் சைல்டு’ என தலை மீது தூக்கிக் கொண்டாடப்பட்ட இந்த நடிகைக்கு கடந்த இரண்டு வருடங்களாக நாட்டுக்குள் நுழையத் தடை விதித்துள்ளது ஈரான் அரசு. தற்போது பாரீஸ் நகரில் வசிக்கும் ஃபரஹானி அப்படி என்னதான் செய்தார்?
2012ல் பிரெஞ்சுப் பத்திரிகையான 'மேடம் ஃபிகரோ’வில் மேலாடை இல்லாமல் மார்பில் கையை வைத்து மறைத்துக் கொண்டு கொடுத்த கறுப்பு வெள்ளை அதிரடி போஸ்தான் இந்தத் தடைக்குக் காரணம்.
போஸ் கொடுத்துவிட்டு லண்டன் விமான நிலையத்தில்  விமானத்துக்காகக் காத்திருந்தவர் கண்களில் பட்ட 'டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகையின் மூலம்தான் இந்த விஷயமே தெரிய வந்தது. ஈரான் அரசின் கலாசாரத் துறை சார்பாக இப்படி ஓர் அறிவிப்பை ஐரோப்பா நாடுகளில் வெளியாகும் சில பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்கள். 'இனி இப்படி ஒரு நடிகை எங்கள் நாட்டுக்குத் தேவை இல்லை.
இனிமேல் உங்கள் கலைச்சேவையை எந்த நாட்டிலும் தொடரலாம். மீறி நாட்டுக்குள் நுழைந்தால், நாட்டின் கலாசாரத்தைக் காப்பாற்றத் தவறிய பெண் என்ற முறையில் கைதுசெய்யப்படுவீர்கள்’ என்ற செய்தியே அது.
ஃபரஹானிக்கு ஆதரவாக அவருடைய முகநூல் பக்கத்தில் இன்று வரை விவாதம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 'பழமைவாதக் கருத்துக்கு எதிராகப் போராடிய பெண் ஃபரஹானி, பெண் சுதந்திரத்துக்கான அடையாளமாகத் திகழ்ந்தவர், உடலைக் கொண்டாடுவது பெண்ணின் சுய விருப்பம் அதை எந்த மத அமைப்பும் தடைபோட உரிமை இல்லை’ என்றெல்லாம் அவருக்கு ஆதரவுக் குரல்கள் வலு சேர்த்து வருகின்றன. ஈரான் சினிமாவில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களுக்குத் தடை உண்டு. ஆனால் இவர் நடித்த படங்கள் மறைமுகமாகப் பெண் உரிமைகளைப் பேசுவதாக இருந்தன. சில படங்கள் மதத்தை விமர்சனம் செய்வதாகத் தடையும் செய்யப்பட்டன.
இதைத் தவிர்த்து 1997லிருந்து ஃபரஹானி நடித்த படங்கள் அத்தனையிலும் பெண் சுதந்திரத்தை வலியுறுத்திய கேரக்டர்களில்தான் நடித்திருக்கிறார். 'மிம் மெஸ்லே மதார்’ என்ற படத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தையின் தாயாக, 'சந்தூரி’ படத்தில் போதைப் பழக்கத்துக்கு ஆளான கணவனிடம் போராடும் மனைவியாக, 'செதாரே’ படத்தில் மோட்டர் சைக்கிளில் சாகசம் செய்ய விரும்பும் பெண்ணாக நடித்திருந்தார். இவருடைய அழகும் நடிப்பும் மேற்கத்திய நாடுகளின் இயக்குநர்களை ஈர்த்ததால், 'பாடி ஆஃப் லைஸ்’ , 'தேர் பீ டிராகன்ஸ்’ போன்ற வெளிநாட்டுப் படங்களிலும் ஆக்‌ஷன் மற்றும் கிளாமர் ரோலிலும் நடித்துக் கலக்கி இருந்தார்.
''எப்படி நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். இதற்காக நாட்டுக்குள் நுழையக் கூடாது என்பது உரிமை மீறல்'' என ஃபரஹானி குரல் கொடுத்தாலும் ''கட்டுப்பாட்டுக்கும் கண்ணியத் துக்கும் உள்ளான ஈரான் சினிமாவில் நன்கு நடிக்கும் ஃபரஹானி போன்ற நடிகை ஏன் வெறும் கவர்ச்சிப் பதுமையாக மேற்கத்தியப் படங்களில் நடித்து தனக்கும் நாட்டுக்கும் களங்கம் தேடிக்கொள்கிறார்? அவர் மனம் மாறி வந்தால், தடையை விலக்குமாறு அரசினை வலியுறுத்துவோம்'' என்று அண்மையில் ஈரான் சினிமா கூட்டமைப்பு சொல்லி இருக்கிறது. ஆனால், அண்மையில் ரிலீஸான 'மை ஸ்வீட் பெப்பர்லேண்ட்’, 'ஈடன்’ போன்ற பிரெஞ்சுப் படங்களில் லிப்லாக், பெட்ரூம் சீன்களில் நடித்திருக்கிறார் ஃபரஹானி.
துணிச்சல்!
ஆர்.சரண்

கருத்துகள் இல்லை: