வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அவுஸ்த்ரேலியா வரும் அகதிகளை கம்போடியாவில் குடியமர்த்தும் ஒப்பந்தம் கைச்சாத்து !

இந்தோனேசியா பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடிபுக வரும் அகதிகளின் அதிகரித்துவரும் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு சர்ச்சைக்குரிய கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தாங்கள் நிராகரிக்கும் அகதிகளைப் பராமரிக்கத் தேவையான நிதிஉதவியை கம்போடிய அரசுக்கு அளித்து அவர்களை அந்நாடு ஏற்றுக்கொள்ள வழி செய்யும் ஒரு ஒப்பந்தத்தை அந்நாட்டுடன் ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்காட் மோரிசனும், கம்போடியாவின் உள்துறை அமைச்சர் சர் கெங்கும் இன்று கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த அகதிகளுக்கான மீள்குடியேற்ற செலவுகளுடன் ஆஸ்திரேலிய நாட்டுப் பண மதிப்பில் 40 மில்லியன் டாலர்களையும் வரும் நான்கு வருடங்களுக்குள் இந்தத் தென் கிழக்கு ஆசிய நாட்டிற்கு வழங்குவதாக ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது.  இதில் கவலைக்குரியவிடயம்என்னவென்றால்  ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே சென்று அகதிஅந்தஸ்துபெற்று தற்போது பிரஜாவுரிமையும் பெற்று  டாக்டர்களாக  பொறியியலாளர்களாகஉள்ள  நம்ப  ஈழத்தமிழர் யாரும் சக ஈழ அகதிகளுக்காக  ஆர்ப்பாட்டங்களில்  கலந்துகொள்ளவில்லை .அவர்கள்தான்மேட்டுகுடிகளாகிவிட்டனரே ?


ஆரம்பகட்ட பயிற்சித்திட்டமாக ஒரு சிறிய அகதிகள் குழு கம்போடியாவிற்கு அனுப்பப்படுவதாக இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

பசிபிக் தீவான நவுருவில் உள்ள செயலாக்க மையத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகளே முதலில் கம்போடியாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்று மோரிசன் குறிப்பிட்டுள்ளார். அங்கு குடியேற விருப்பம் காட்டுபவர்கள் மட்டுமே அனுப்பப்படுவர் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் இடமாற்றப் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். அதுபோல் கம்போடியாவுக்கு அனுப்பப்படும் அகதிகளின் எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இருக்காது என்பதையும் மோரிசன் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தமானது ஆஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமைக் குழுக்களிடையே கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. குறைவான வசதிகளைக் கொண்ட கம்போடியாவால் அகதிகளைப் பராமரிப்பது கடினமான செயலாக இருக்கும் என்று கூறும் இந்த அமைப்புகள் சிட்னியிலும், நாம்பென்னிலும் கூடி தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: