மும்பை: தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியாலும், சுழற்சி முறை ஆட்சியில்
பங்கு கோரியதாலும் மகாராஷ்டிராவில் ஆளும் காங். -தேசியவாத காங்.கூட்டணி
முறிந்தது. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. பா.ஜ.,சிவசேனாவிலும் கூட்டணி உடைந்ததால் நான்கு முனைப்
போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா சட்டசபைக்கு
அக்.15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் தற்போது ஆளும் காங்.-
தேசியவாத காங். கூட்டணி சார்பில் முதல்வராக காங்.கட்சியைச் சேர்ந்த
பிருதிவ்ராஜ் சவான் உள்ளார்.துணை முதல்வராக தேசியவாத காங். கட்சியின்
அஜித்பவார் உள்ளார்.
இரு கட்சிகளும் மத்தியிலும்,மாநிலத்திலும் கடந்த 15 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளன. தற்போது தேர்தலை கூட்டாக சந்திக்க உள்ள நிலையில் கடந்த சிலநாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவர்த்தைநடந்தது.
இதில் கூடுதல் தொகுதிகளை கேட்டு தேசியவாத காங். அடம்பிடித்ததை தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது.யாரப்பா அது அங்கேயும் யாராவது பிரவீன் குமார் மாதிரி ஆளுங்க இருப்பாக அவிங்களோட கூட்டணி வச்சவிங்க நிச்சயம் வெற்றி பெருவாய்ங்க ! ஆமா ?
இது தொடர்பாக இன்று பேட்டியளித்தார் தேசியவாத காங். மூத்த தலைவர் பிரபுல்பட்டேல், அவர் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக காங். கட்சியை ஆதரித்து வருகிறோம். இந்தகூட்டணி தொடரும்.ஒவ்வொரு முறையில் காங்.கட்சியினரே ஆட்சி நடத்துகின்றனர். எனவே தொகுதி பங்கீடு குறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே காங்.தலைவர் சோனியாவை சந்தித்தோம்.மாகாராஷ்டிராவை பொறுத்தவரையில் எங்கள் கட்சி தான் பலம் வாய்ந்தது. 124 தொகுதிகள் போதாது, மேலும் சுழற்சி முறையில் முதல்வர் பதவியையும் வலியுறுத்தினோம் என்றார்.
15 ஆண்டு கூட்டணி முறிந்தது
இதற்கிடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டாததால், தனித்துபோட்டியிட தேசியவாத காங். முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதையடுத்து துணை முதல்வராக உள்ள தேசியவாத காங். கட்சியின் அஜித்பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தினை கவர்னரிடம் அளிக்க உள்ளார். மேலும் காங்.கட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் தேசியவாத காங். விலக்கி கொள்ள உள்ளதால், கடந்த 15 ஆண்டு கூட்டணி முறிந்தது.
நான்கு முனைப்போட்டி உருவாகுமா ?
அதே போன்று தொகுதி உடன்பாட்டில் சுமூக தீர்வு எட்டாத காரணத்தால், மத்தியில் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள பா.ஜ.,- சிவசேனா கூட்டணியிலும் முறிவு ஏற்பட்டுள்ளதால், மகாராஷ்டிரா சட்டசபைதேர்தலில் நான்குமுனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால். மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக