வியாழன், 25 செப்டம்பர், 2014

214 சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: கடந்த, 1993 முதல் 2010 வரை, பல்வேறு நிறுவனங்களுக்கு, சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட, 214 நிலக்கரி சுரங்கங்களுக்கான அனுமதியை, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக ரத்து செய்து, நேற்று உத்தரவிட்டது. முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. மத்திய கணக்கு தணிக்கை துறை தாக்கல் செய்த அறிக்கையில், 'சட்ட விரோதமாக சுரங்க ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. ஐ.மு., கூட்டணி ஆட்சி: கடந்த, 2012ல், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு எடுத்தது. சுப்ரீம் கோர்ட், இந்த விசாரணையை கண்காணித்தது. விசாரணையின் இடையில், ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்துக்கு முன், தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுரங்க ஒதுக்கீட்டிலும், முறைகேடு நடந்தாக புகார் கூறப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடும்  1. 86  லட்சம் கோடி இழப்பு ? சுரங்க முறைகேடுகளிலும்  1.86 லட்சம் கோடி இழப்பு ? எப்படி இரண்டிலும் அச்சொட்டாக ஒரே அளவு ? எள்ளளவும் பிசகாமல் இழப்பு ஏற்பட்டது ? சும்மா சும்மா ஜோக் அடிக்கக்கூடாது , முதல்ல இந்த இலக்கத்தை கண்டு பிடிச்சவிங்களை தூக்கி ஜெயில்ல போடணும் . முரளி மனோகர் ஜோஷி முதல்ல உள்ள போகணும் அவருதாய்ன் ராஜா இவ்வளவு கோடின்னு வலியுறுத்தினாராம் எல்லாம் பார்ப்பான் சேட்டை . அடுத்தது நம்ப பக்கத்துக்கு மலையாள டெல்லி ஜால்ராக்கள்  ? நம்மக்கு என்னவோ இது கம்பியுட்டர் பண்ணின முறைகேடுன்னு தோணுது ! அதாய்ன் சேம் நம்பர் சேம் தொகை , மனுஷனால இது சாத்தியமே இல்லை / இந்த இலக்கத்துக்கு எதோ நியு மோராலாஜி விவகாரம் இருக்கு ?
இதையடுத்து, 1993 முதல் 2010 வரையிலான சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து, சுப்ரீம் கோர்ட், விசாரணை நடத்தியது. கடந்த மாதம், இந்த வழக்கில் முக்கிய உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது. அதில், 'குறிப்பிட்ட காலத்தில் எந்தவித பொறுப்புணர்வும், வெளிப்படை தன்மையும் இல்லாமல், அவசர கோலத்தில், அலட்சியமாக சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது சட்டவிரோதம்' என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. 'இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் எடுக்கும் முடிவை மத்திய அரசு ஏற்கும்' என, மத்திய அரசு தெரிவித்தது.இந்நிலையில், தலைமை நீதிபதி ஆர்.எம்.லோடா, நீதிபதிகள் மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன் இந்த வழக்கு நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கடந்த, 1993 - 2010 வரையிலான காலத்தில், 218 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த அனைத்து ஒதுக்கீடுகளுமே, முறையாக நடக்கவில்லை. பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்தது, கடந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. எனவே, தேசிய அனல் மின் நிலையம், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கங்கள், 'மெகா பவர் புராஜெக்ட்' திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு சுரங்கங்கள் ஆகிய நான்கு சுரங்கங்களுக்கான அனுமதியை தவிர, மற்ற 214 நிலக்கரி சுரங்கங்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது.சுரங்க அனுமதி ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதத்துக்குள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். சுரங்க ஒதுக்கீட்டுக்கான அனுமதி பெற்றும், பல நிறுவனங்கள், நிலக்கரியை குறிப்பிட்ட காலத்துக்குள் வெட்டி எடுக்காததால், ஒரு டன் நிலக்கரிக்கு, 295 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அரசு தெரிவித்துள்ளது. எனவே, இந்த இழப்பீட்டு தொகையை, சுரங்க நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம், இரண்டு ஆண்டாக நடந்து வந்த இந்த வழக்கிற்கு தீர்வு கிடைத்துள்ளது.


விசாரணை:
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை அடுத்து, சுரங்க ஒதுக்கீடு நடந்த காலத்தில், நிலக்கரி துறைக்கு அமைச்சராகவும், அதிகாரிகளாகவும் பொறுப்பு வகித்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி, சுரங்க ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்த விஷயத்தில் இவர்கள் விசாரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


தொழில் துறை கவலை




*'தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கங்களுக்கான அனுமதியை ரத்து செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்' என, தொழில் துறையினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
*ஆனால், 'இதனால் ஏற்படும் எந்த ஒரு பொருளாதார மற்றும் சமூக பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்' என, தே.ஜ., கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தது.
*தங்கள் தீர்ப்பின்போது, மத்திய அரசின் இந்த விளக்கத்தை கவனத்தில் எடுத்து கொண்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
*சுரங்க ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், கட்டுமானம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு, ஒட்டுமொத்தமாக, 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக, தொழில் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*சட்டவிரோத சுரங்க ஒதுக்கீடு நடந்த காலத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிலக்கரி துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சம்பாதித்த பணத்தை முதலீடு செய்த, திடீர் கோடீஸ்வரர்களுக்கு இந்த உத்தரவு, பலத்த அடியை கொடுக்கும். சுரங்க ஒதுக்கீட்டுக்கு காரணமாக இருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரத் யாதவ்,தலைவர் - ஐக்கிய ஜனதா தளம்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மகிழ்ச்சியை அளிக்கிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விஷயத்தில், புதிய துவக்கத்துக்கு இந்த உத்தரவு வழி வகுத்துள்ளது. அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான், இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
ரவிசங்கர் பிரசாத்,மத்திய சட்ட அமைச்சர் - பா.ஜ.,

முந்தைய, காங்., ஆட்சி காலத்தில் சுரங்க ஒதுக்கீடுகள், பாரபட்சமாகவும், சட்டவிரோதமாகவும் நடந்தன. இனிமேல், சுரங்க ஒதுக்கீட்டில் வெளிப்படை
தன்மை பின்பற்றப்படும். என்னென்ன சீர்திருத்தங்கள் தேவைப்படுமோ, அதைக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ஸ்ரீகாந்த் சர்மா,பொதுச்செயலர் - பா.ஜ. dinamalar.com

கருத்துகள் இல்லை: