டெல்லி
உயிரியல் பூங்காவில் இளைஞரை புலி தாக்கி கொன்ற விவகாரத்தில், புலி மீது
எந்த தவறும் இல்லை என்றும் தடுப்பு வேலியை தாண்டி சென்ற இளைஞர் மீதே முழு
தவறும் உள்ளது என்று டெல்லி உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது.தலைநகர்
டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் நேற்று வெள்ளைப்புலியின் வசிப்பிட
பகுதிக்குள் தவறிவ் விழுந்த 20 வயது இளைஞர் ஒருவரை, அங்கு வந்த
வெள்ளைப்புலி அந்த வாலிபரை தனது வாயால் கவ்வி சென்றதுபலியான வாலிபர்,
டெல்லி ஆனந்த் பர்பாத் பகுதியை சேர்ந்த மக்சூத் என தெரிய
வந்துள்ளது.வாலிபரின் கழுத்து, தலையை கடித்துக் குதறிய வெள்ளைப்புலி, அவரது
தலையின் சில பகுதிகளை தின்று விட்டதாக பூங்கா ஊழியர்கள் சிலர்
தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து மத்திய பூங்கா மற்றும் சுற்றுசூழல்
அதிகாரிகள் டெல்லி உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிந்து பாதுகாப்பு
அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதுதாண்டா பொறுப்பான பதில் !
இந்த
நிலையில் இது தொடர்பாக டெல்லி உயிரியல் பூங்கா அறிக்கை ஒன்று
வெளியிட்டுள்ளது. அதில், இளைஞர் தடுப்பு வேலியில் இருந்து தவறி விழவில்லை
என்றும் வேண்டும் என்றே குதித்ததாக தெரிவித்துள்ளது.
அந்த
அறிக்கையில், ‘’தேசிய வனவிலங்கு பூங்காவில் அனைத்து தடுப்பு வேலிகளும்
மிகவும் பாதுகாப்பானவை. தடுப்பு அரண்கள் இல்லாமல் எந்த அகழிகளுமே
அமைக்கப்படவில்லை. அந்த பார்வையாளர் தடுப்பு அரண்களை தாண்டியுள்ளார்.
இறுதியில் வேலிகளை தாண்டி வெள்ளைப்புலியின் வசிப்பிட பகுதிக்குள்
குதித்துள்ளார்.
இந்த
சம்பவம் நடைபெற்றவுடன் அங்கு பணியில் இருந்த பிரவீன் என்ற காவலர்
உடனடியாக எச்சரிக்கை அழைப்பை விடுத்தார். மேலும் அங்கு இருந்த
கண்காணிப்பாளர்களையும் பிற அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பி அழைத்து கொண்டு
சென்றுள்ளார். பணியில் இருந்த காவலர் பிரவீன் மற்றும் பிற பூங்கா
அதிகாரிகள், இளைஞரை பிடித்து வைத்திருந்த புலியின் கவனத்தை திசை திருப்ப
முயன்றனர். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக