சனி, 5 ஏப்ரல், 2014

Manobala to Vijayakanth : மலேசியா விமானத்தை எங்கெல்லாமோ தேடுறாய்ங்க ஆனா Google ள்ள தேடணும்னு யாருக்கும் தோணல்லியே? குடிச்சிட்டு பேசுறான்னு திட்ராய்ங்க


விஜயகாந்தை கலாய்த்து ட்வீட் போட்ட கையோடு டிலீட் செய்த மனோபாலா 
மலேய  விமானம் மாயமானது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை கலாய்த்து இணையதளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தை நகைச்சுவை நடிகர் மனோபாலா ட்விட்டரில் வெளியிட்ட கையோடு டிலீட்டும் செய்துவிட்டார்.
இந்திய பெருங்கடலுக்குள் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க மலேசிய அரசு தேமுதிக தலைவர் விஜயகாந்தை அணுகியதாக ஃபேஸ்புக்கில் அவரை கலாய்த்தனர். மேலும் அவர் விமானத்தை கண்டுபிடிக்க விண்வெளிக்கு கிளம்பியதாகவும் காமெடி செய்தனர். இந்நிலையில் விஜயகாந்தை பற்றி வந்துள்ள புதிய காமெடியை நகைச்சுவை நடிகர் மனோபாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் கருப்புக் கண்ணாடி அணிந்து தன் முன்பு கூடியிருக்கும் மக்கள் மத்தியில் பேசுவது போன்ற புகைப்படத்தை எடுத்து அதில் 'பாருங்க மக்களே மலேசிய விமானத்த எங்கெங்கோ தேடுறாங்க. ஆனா GOOGLE-ல தேடனம்னு யாருக்குமே தோனல. இத நான் சொன்னா குடிச்சிட்டு பேசுறன்னு சொல்வாங்க' என்று வசனத்தை எழுதியுள்ளனர். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் போட்ட வேகத்தில் அதை மனோபாலா டிலீட் செய்துவிட்டார்  எங்கெல்லாமோ தேடுறாய்ங்க ஆனா Google ள்ள தேடணும்னு யாருக்கும் தோணல்லியே? குடிச்சிட்டு பேசுறான்னு திட்ராய்ங்க  tamil.oneindia.in  

கருத்துகள் இல்லை: