'ஒப்பனையற்ற
செல்பீ' படம் மூலம் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் பிரிட்டனைச்
சேர்ந்த 18 வயதான பியோனா கன்னிங்ஹம் என்ற ஒரு குழந்தையின் தாய் ஒருவரின்
திட்டம் சமூவ வலைத்தளத்தினூடாக வெகுவாகப் பரவி 8 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்
(சுமார் 173 கோடி ரூபா) நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஒஸ்கார்
விருது வழங்கல் விழாவுக்கு ஒப்பனை இன்றி வந்த நடிகை கிம் நொவக் பரலாரும்
ஈர்க்கப்பட்டார் என்பதுடன் இதுவே புற்றுநோய் அறக்கட்டளைக்கு 'ஒப்பனையற்ற
செல்பீ' (நோ மேக்அப் செல்பீ) படத்துடன் பணத்தினை நன்கொடையாக வழங்க மக்களை
ஊக்குவிக்க காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்டஃப்போர்ட்ஷயரிலுள்ள தனது
வீட்டு படுக்கையறையில் வைத்து இதற்காக ஒரு பேஸ்புக் குழு (பேஸ்புக் குரூப்)
ஒன்றை மார்ச் 16 திகதி ஆரம்பித்துள்ள பியோனா பிரித்தானிய புற்றுநோய்
ஆராய்ச்சிக்கு நன்கொடையளிக்கும்போது ஒப்பனையற்ற செல்பீ படத்தினையும்
பேஸ்புக்கில் போஸ்ட் செய்து மக்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.
இதே பேஸ்புக் குரூப்பினை ஆரம்பித்து 2 நாட்களில் உலகம் முழுவதிலிருந்தும் 260,000 பேர் அதனை லைக் செய்து ஆதரவளித்தள்ளனர்.
திறந்த பல்கலைக்கழகத்தில்
குற்றவியல் உளவியல் பட்டப்படிப்பைத் தொடரும் பியோனா பேஸ்புக்கை மேற்பார்வை
செய்ய 12 நண்பர்களை பணிக்கமர்த்தியுள்ளார் என்பதுடன் பேஸ்புக் குழு
ஆரம்பிக்கப்பட்ட 2 நாட்களில் ஒப்பனையற்ற செல்பீ பிரசாரத்தின் மூலம் மட்டும்
நேரடியாக 2 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நன்கொடையாக கிடைத்துள்ளதாக
பிரித்தானிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் பெருமையுடன் அறிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக