சனி, 5 ஏப்ரல், 2014

சேதுசமுத்திர பணிகள் நிறைவேறும் சமயத்தில் தட்டி கொட்டிய Admk and BJP


சேது சமுத்திரத் திட்ட பணிகள் முடிவடையும் நேரத்தில் அதிமுக, பாஜகவால் தடைப்பட்டுள்ளது: டி.ஆர். பாலு பேச்சு
தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட மதுக்கூர் ஒன்றியத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
சேது கால்வாய் திட்டம் ரூ. 2,427 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு பணிகள் முடிவடையும் நேரத்தில் ஜெயலலிதாவும், பா.ஜ.க.வை சேர்ந்தவர்களும் நீதிமன்றத்தில் பணிகள் நடைபெறாமல் இருக்கத் தடை வாங்கியுள்ளனர். இதனால், 10 தென் தமிழக மாவட்டங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10,000 இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பும் தடைப்பட்டுவிட்டது. தமிழகத்தின் நலனில் அக்கறையில்லாத முதல்வர். பா.ஜ.க.வும் இந்தத் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.


நான் மத்திய அமைச்சராக இருந்த போது மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் 2,000 கி.மீ.க்கு நான்கு வழிச் சாலைப் பணிகள் ரூ. 56 ஆயிரம் கோடிக்கு நடைபெற்றன.
மன்னை - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய ரயில் தடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் - திருச்சி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றார் .nakkheeran.in  

கருத்துகள் இல்லை: