புதுடில்லி: வரவிருக்கும் தேர்தலில் முஸ்லிம் மக்கள் அனைவரும்
காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என டில்லி ஜூம்மா மஜீத் ஷாகி இமாம்
சையீது அகம்மது புக்காரி கேட்டுள்ளார்.
இன்று அவர் டில்லியில் நிருபர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: அனைவரும் காங்கிரசுக்கு ஓட்டளிக்குமாறு நான் கேட்டு கொள்கிறேன். மோடியின் கடந்த கால செயல்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது வரை எந்த அரசியல் கட்சியும் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை. அதே நேரத்தில் இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு மதச்சார்பின்மையே முக்கியம். எனவே மதச்சார்பு சக்திகளுக்கு எதிரானவர்கள் ஒன்றுபட வேண்டும். மதச்சார்பின்மை ஓட்டுக்கள் சிதறி விடக்கூடாது. தவறானவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இந்த நாட்டில் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பேணி காக்கப்பட வேண்டும் ஊழலை விட மிக கொடியது: உ பி., மாநிலம் முஷாபர்நகரில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்களுக்கு ஆளும் அரசு பாதுகாப்பு அளிக்கவில்லை. முஸ்லிம்கள் உரிமை பாதுகாக்கப்படவில்லை. இந்த கலவரத்தில் பகுஜன்சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சிகள் எவ்வித உதவியும் செய்யவில்லை. இந்த கட்சிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பீகாரில் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் லாலு கட்சியை ஆதரிப்போம். மேற்குவங்கத்தில் மம்தாவை ஆதரிக்க வேண்டும். ஊழலை விட மதச்சார்பு தான் மிக கொடியது. இவ்வாறு இமாம் புகாரி கூறினார்.
முஸ்லிம்கள் ஓட்டுக்கள் : முஸ்லிம்களுக்கு 35 சதவீத முஸ்லிம் ஓட்டுக்கள் கொண்ட தொகுதிகள் 30க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டை விட காங்கிரசுக்கு முஸ்லிம் ஓட்டுக்கள் 2 சதம் உயர்ந்துள்ளது. என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக