நாட்டில், வி.ஐ.பி., கலாசாரம் பெருகிவிட்டதாக பல்வேறு தரப்பினரும்
குற்றம்சாட்டி வரும் நிலையில், மேலும், 22 வி.ஐ.பி.,க்களுக்கு, மத்திய துணை
ராணுவப் படையின் சிறப்பு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம்
அனுமதி வழங்கியுள்ளது.ஏற்கனவே, விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த
நிலை, ஊழல் போன்ற பல்வேறு காரணங்களால், மக்கள் அவதிப்படும் நிலையில்,
மத்திய அரசின் இந்த முடிவால், மக்கள் வரிப்பணம் மேலும் வீணடிக்கப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
ஜோலிகள் ஆயிரம் இருக்க இதெல்லாம் வேஸ்ட் , நான் நேருவையே நெறைய பக்கத்துலேயே பாத்துருக்கேன் அவ்ளோ எளிமை . அதேபோல காமராஜர் ராஜாஜி லால்பகதூர் ஆர்வி சிசுப்ரமனியம் எல்லாருமே அவ்ளோ எளிமையா இருந்தாக , இந்தமாதிரி எல்லாம் முன்னாடி 10கார்கல் பின்னாடி10கார்கல்லெவர பந்தாவெல்லாம் இல்லே , மவுண்ட் ரோட்லேயே முன்னாடி ஒரு சைரன் கார்வரும் பின்னாடி நேருவின் கார் வரும் அவ்ளோதான் இப்போ எல்லாமே வெறும் பந்தா பரமசிவமா ஆட்டம்போடுதுங்க அம்மாக்கு பிரசாரம் பண்ண தனிவிமானம் ஹெலிகாப்டர் கார்கள் என்று வீண் ஆர்பாட்டமே நடக்குது . சோனியா அப்டேரால் ஒருகச்சிதலைவி அம்புடுதான் ஆனால் அவளுக்கு எவ்ளோ செக்யூரிடி காவல் படைபூனைபடை ன்னு ,இந்திராகூட இவ்ளோ ஆரவாராம் செயலே .நம்மளை எமாத்துறாக என்று தெரியுது எவனும் ஒரு மண்ணும் நோன்ண்ட முடிலே . இந்தபகட்டுலேதான் மயங்கி கொடியிலே சொத்து சேக்கலாம்னு அரசியலுக்கே வாராக
100 நாட்களில்...
மத்தியில் ஆளும் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 10 ஆண்டுகளில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளது. இந்நிலையில், 100 நாட்களில், 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற அறிவிப்புகளை லோக்சபா தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி அள்ளி வீசி உள்ளது.ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனில் அக்கறை காட்டாத காங்., தலைமையிலான மத்திய அரசு, 'கார்பரேட்' முதலாளிகளின் கைப்பாவையாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசின் வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்பு அறிவிப்பு அமைந்துள்ளது.மத்திய ரிசர்வ் போலீஸ் படை - சி.ஆர்.பி.எப்., மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை - சி.ஐ.எஸ்.எப்., படை வீரர்கள் வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுக்கு, விசேஷ கைத்துப்பாக்கிகள், அதிநவீனஆயுதங்கள், குண்டு துளைக்காதவாகனங்கள், குண்டு துளைக்காத கவச உடைகள் போன்றவற்றுடன், சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
இதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும், ஒரு பெரும் தொகையை செலவழிக்கிறது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், தமிழகத்தை சேர்ந்த, தி.மு.க., பொருளாளர், மு.க.ஸ்டாலின், பா.ஜ., வை சேர்ந்த சுப்ரமணிய சுவாமி போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர், முகேஷ் அம்பானி, பிரபல புலனாய்வு பத்திரிகை கோப்ரா போஸ்ட்டின் ஆசிரியர், அனிருத்தா போன்ற பல்வேறு தரப்பை சேர்ந்த வி.வி.ஐ.பி.,க்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.முகேஷ் அம்பானி போன்றோர், தங்கள் பாதுகாப்பிற்காக செலவழிக்கும் தொகையை தாங்களே ஏற்கத் தயார் என அறிவித்தாலும், அனைத்து வி.ஐ.பி.,க்களுக்கும் இந்த முறையை நடைமுறைபடுத்தமுடியாது.
'வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்பு தேவை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பயிற்சி பெற்ற வீரர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை' என, துணை ராணுவப் படை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு வழங்கும் படைப் பிரிவின், பயிற்சி பெற்ற வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே, பாதுகாப்பு பெறும் வி.ஜ.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், 2013 - 14ல், கூடுத லாக, 22 வி.ஐ.பி.,க்களுக்கு சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
1,200 வீரர்கள்
இதுகுறித்து துணை ராணுவப்படை அதிகாரிகள் கூறியதாவது:நாட்டில் வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பில் ஈடுபடும், துணை ராணுவப்படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். தற்போது, இப்படைப் பிரிவில், 1,200 படை வீரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை, 4,000 ஆக உயர்த்த வேண்டும்.அப்போது தான், அனைத்து வி.ஐ.பி.,க்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்க முடியும். தவிர, இவர்கள் அனைவருக்கும் நவீன ஆயுதங்களுடன் கூடிய முறையான பயிற்சி வழங்க வேண்டும். அதற்காக, மேலும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறி உள்ளனர்.
நெருக்கடி:
மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டாத மத்திய அரசு, பொதுமக்களின் வரிப்பணத்தில், வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பிற்காக கோடிக்கணக்கில் செலவழிப்பது தேவைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.விரைவில் லோக்சபா தேர்தல் முடிந்து, மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றகவுள்ள நிலையில், வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளில், இதே நிலை தொடர்ந்தால், மத்தியில் ஆட்சி அமைக்கும் புதிய அரசுக்கு நெருக்கடி ஏற்படலாம் என, பல்வேறு துறையினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக