பெங்களூருவில் நடைபெறுவதென்ன ? கிட்டத்தட்ட 18
ஆண்டுகாலமாக 200 முறைக்கும் மேல் வாய்தா வாங்கியிருக்கும் வழக்குதான்
பெங்களூரில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கு என்று வடசென்னை திமுக
பிரச்சாரத்தில் ஸ்டாலின் கூறினார்.
மேலும், பெங்களூரு நீ மன்றத்தில் அரசுத்தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களின் பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.
1. சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர்,
2. சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா.
3. நீலாங்கரையில் 2 ஏக்கர்.
4. கொடநாட்டில் 900 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். ( இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும் இதுவே 4 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது. இது ஒரு உத்தேச மதிப்புதான்.)
5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.
6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் ஆயிரத்து 190 ஏக்கர்.
6. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.
7. ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்
8. 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்கர்கள்
9. ஐதராபாத்தில் திராட்சைத் தோட்டம்.
விரைவில் இன்னும் அதிகமான பட்டியல் வெளியாக உள்ளது. அவை என்ன தெரியுமா ? ஜெயலலிதா வீட்டில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள தங்க - வெள்ளி நகைகள், 10,500 க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் விவகாரம், ஜெயலலிதா உபயோகித்த ஏராளமான கைக்கடிகாரங்களின் பட்டியல், அதுமட்டுமல்ல ஜெயலலிதா பயன்படுத்தி வந்த செருப்புகள் என பல்லாயிரம் கோடிகள் ரூபாய் மதிப்புள்ள பொருட்களின் பட்டியல் வெளியாக உள்ளது.
ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோரும் வாங்கிக் குவித்துள்ள ஒட்டுமொத்த சொத்துக்கள் கிட்டத்தட்ட 3300 ஏக்கர் நிலங்கள் என பெங்களூரு நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்குரைஞர் பவானி சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
1991 - 1996 ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில், ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது எனக்கு சம்பளமே வேண்டாம், ஆனால் அரசுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மாதம் 1 ரூபாய் மட்டும் சம்பளமாக வாங்கிக் கொள்கிறேன் என அறிவித்தார்.
அதன்படி 5 ஆண்டுகளில் ஜெயலலிதா பெற்றிருக்கக் கூடிய மொத்த சம்பளம் 60 ரூபாய். ஆனால் அந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ஜெயலலிதா வாங்கி குவித்த பலாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், சொத்துக்கள் எவ்வளவு என்று இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது என்றார் ஸ்டாலின் dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக