வியாழன், 3 ஏப்ரல், 2014

அழகிரி ஹிட் லிஸ்ட்: அடுத்து டி.ஆர். பாலு!


ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது குறித்த காங்கிரஸ் முடிவு தெரிவிப்பதற்குள் டி.ஆர்.பாலு போன்றவர்கள், தி.மு.க. தலைவரிடம் தவறான தகவல்களைத் தெரிவித்து தி.மு.க. அமைச்சர்களை அவசர அவசரமாக ராஜினாமா செய்ய வைத்தனர். இந்த முடிவு மத்திய அமைச்சரான எனக்கே தெரியாது.
டி.ஆர்.பாலு என்ன எம்.ஜி.ஆரா? கருணாநிதியா? நினைத்த தொகுதிகளில் நிற்பதற்கு?
ஏற்கெனவே நின்ற ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஏன் நிற்கவில்லை? அங்குள்ள மக்களுக்கு தொகுதியில் நல்லது செய்திருந்தால் ஏன் வேறு தொகுதியைத் தேட வேண்டும்? இந்தத் தொகுதிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?
பழனி மாணிக்கத்தைத் தவிர தஞ்சாவூரில் கட்சிக்குள் உழைத்தவர்கள் வேறு யாருமில்லையா? டி.ஆர்.பாலு 10 கப்பல்களுக்குச் சொந்தக்காரர். அவரை சென்னையில் மாவட்டச் செயலாளர் தேர்தலிலே நாங்கள்தான் வெற்றிபெற வைத்தோம்.
அவர் எப்படி தேர்தலில் ஜெயிக்கப் போகிறார்? எவ்வளவு பணம் கொடுத்து தங்சையில் சீட் வாங்கினாரோ, தெரியவில்லை.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாம் மேலே வர என்ன செய்ய வேண்டுமோ அதை நன்றாகச் சிந்தித்துச் செய்யுங்கள். இது நம்முடைய கட்சி. நாம்தான் தி.மு.க.. அப்புறம் எதற்குத் தனிக்கட்சி?
தனது தந்தை ஷாஜஹானை சிறை வைத்து ஔரங்கசீப் ஆட்சியைப் பிடித்ததுபோல தி.மு.க. தலைவர் கருணாநிதியை சிறைவைத்து அவரது பதவியைப் பிடிக்கச் சிலர் முயல்கின்றனர்.

கட்சியிலிருந்து நீக்கிவிட்டீர்கள். அதேபோல, கத்திமுனையில் நான் கருணாநிதியின் பிள்ளை இல்லை என்று சொல்ல முடியுமா? யாருக்கும் அந்த உரிமை கிடையாது. அதை எழுதித்தர வேண்டியதுதானே?
இந்தத் தேர்தலைவிட்டால் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. ஆகையால் நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று பேசினார் அழகிரி.
அழகிரி பேச்சின் பெரும் பகுதி டி.ஆர்.பாலுவைப் பற்றியதாக இருந்ததால், இந்தப் பேச்சு தஞ்சாவூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
அழகிரியின் பேச்சு குறித்து டி.ஆர்.பாலுவை நாம் நேற்று தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் தனது செல்போனை எடுக்கவில்லை. பயங்கர மூட் அவுட்டாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், அழகிரியின் பேச்சு விவரம் தி.மு.க. தலைமைக்கு குறிப்பாக கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு உடனடியாக டி.ஆர்.பாலு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தி.மு.க. வேட்பாளர்கள் இப்போது அ.தி.மு.க. வேட்பாளர்களின் பிரசாரத்தை எதிர்கொள்வதைவிட அழகிரியின் எதிர்ப்பை எதிர்கொள்வதிலே பெரும் பிரச்னையாகி வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க அழகிரி ஆதரவாளர்களின் உள்குத்து வேலைகள் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
இதனால், உள்கட்சி மோதலைச் சமாளிப்பதற்கே தி.மு.க. வேட்பாளர்களுக்கு நேரம் சரியாகவிடும் என்பதே தற்போதுள்ள நிலைமை.
முன்னதாக அழகிரியின் ஆதரவாளர்கள் கூட்டம் நடந்த மண்டபத்தின் வெளிப்பகுதியில் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு அழகிரி, கனிமொழி, கருணாநிதி ஆகியோரது படங்களுடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அழகிரி, கருணாநிதி படத்தை மட்டுமே பயன்படுத்த அழகிரி ஆதரவாளர்கள் இப்போது கனிமொழியின் படத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அழகிரியின் நடவடிக்கைக்கு கனிமொழியும் ஆதரவு கொடுத்துள்ளாரோ என்ற பேச்சு தி.மு.க.வினரிடையே அடிபடுகிறது.
கனிமொழியை சந்தித்து அழகிரி ஆதரவு கேட்டதற்குப் பின் கனிமொழி படத்தை அழகிரி ஆதரவாளர்கள் பயன்படுத்தித் தொடங்கியுள்ளனர் என்பதை கவனிக்கவும். viruvirupu.com

கருத்துகள் இல்லை: