ஞாயிறு, 30 மார்ச், 2014

ஜெயலலிதாவின் ஒப்புதல் வாக்குமூலம் :சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்தது உண்மைதான்

;ராமநாதபுரம்: ""சேது சமுத்திர திட்டம், ஒரு பாழான திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால், தமிழக மீனவர் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடும். முதலில் இத்திட்டத்தை நான் ஆதரித்தது உண்மை தான்,'' என, ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அன்வர்ராஜாவை ஆதரித்து, அவர் பேசியதாவது:ஏழை மக்களின் நலன் கருதி சமையல் காஸ் சிலிண்டர்களின், மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்துள்ளேன். சிறுபான்மையினர் நலனுக்காக, உலமாக்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரித்துள்ளேன். நோன்புக் கஞ்சி அரிசிக்கு கூடுதல் மானியம் அளித்து, ஹஜ்யாத்திரை பயண மானியத்தை உயர்த்தியுள்ளேன்.
அப்படியே விடுதலை புலிகளை எதிர்த்தேன் , கரசேவையை ஆதரித்தேன்  வாஜ்பேயி அரசை என் சுயநலத்துக்காக கவிழ்த்தேன் ..கருணாதி ஆரம்பித்ததுக்காக மதுரவாயில் திட்டம் , சட்டசபையை மூடியது , அண்ணா நூலகத்தை முடக்கியது முக்கியகாக வருமானத்துக்கு அதிகமாக லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்ததும் உண்மை என்று நீங்கள் சொல்லி விட்டீர்கள் ஆனால் தமிழக மக்கள் உங்களை இருகரம் கூப்பி , சாரி தரையில் விழுந்து வணங்குவார்கள் ... 
சிறு வணிக கடன், 16 ஆயிரத்து 295 பேருக்கு, 35 கோடி 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வழக்கத்தை விட கூடுதலாக, 3,619 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளேன். ரூ.3 லட்சம் மதிப்புள்ள, 40 கிலோ சந்தன கட்டைகள், நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது."கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்' என முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மாநில பிற்பட்டோர் நல ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம், இலங்கை மீனவர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25ல் இரு நாட்டு மீனவர்களின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. "இலங்கை சிறையிலுள்ள, தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தேன். ஆனால், மேலும் சில மீனவர்கள் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.இதையடுத்து, 77 மீனவர்கள் நேற்று (மார்ச் 28) விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய 21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். அனைத்து மீனவர்களையும் விடுவித்தபின், பேச்சு நடைபெறும். தி.மு.க., ஆட்சியில் தமிழக மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்படவில்லை.

தனது குடும்பம் வளம் கொழிப்பதில் காட்டிய அக்கறையில் ஒரு சதவீதம் கூட தமிழக மக்கள் மீது கருணாநிதி காட்டவில்லை. சேது சமுத்திர திட்டம் ஒரு பாழான திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால், தமிழக மீனவர் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடும். இதனால் இத்திட்டம் சாத்தியமற்றது. முதலில் இத்திட்டத்தை நான் ஆதரித்தது உண்மை தான்."நீரி' மற்றும் பல்லவன் போக்குவரத்து கழக ஆணையம் தெரிவித்த பல்வேறு இடையூறுகளை கருத்தில் கொள்ளாமலும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் தடையின்மை சான்று பெறாமல், 2005ல் இத்திட்டத்தை, மத்திய அரசு அவசர கதியில் துவக்கியது.20 ஆயிரம் டன் கப்பல்கள் மட்டுமே சேது சமுத்திர கால்வாயில் பயணிக்க முடியும். 30 ஆயிரம் டன் கப்பல்கள், இந்த வழித்தடத்தில் பயணிக்க இயலாத நிலை இருந்தது. ஆழம் அதிகமுள்ள பகுதிகளில் செல்லக்கூடிய கப்பல்கள், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளன. "இக்கப்பல்கள் செல்வதால் மீன் உற்பத்தி, இறால் மீன்பாடு குறைவு, மீன்கள் இடம்பெயர்வு உள்ளிட்ட பாரம்பரிய மீன்பிடி பாதிப்பு, பவளப்பாறைகளுக்கு அழிவு ஏற்படும்' என, மீனவர்கள் அச்சம் கொண்டனர். பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் இத்திட்டத்தால் என்ன பயன்? இத்திட்டத்தால் எவ்வித நன்மை ஏற்பட போவதில்லை.யாருக்கும் பயனில்லா இத்திட்டம் தேவை தானா? தென்தமிழகம், மீனவர் நலன், சுற்றுச்சூழல் கருதி இத்திட்டத்திற்கு அ.தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இவற்றை எல்லாம் மீறி, 830 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டது. இத்திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

* பேச்சின் போது 18 முறை, "செய்வீர்களா' என, கூட்டத்தினரைப் பார்த்து ஜெ., கேட்டார்.
* வேட்பாளர் அன்வர்ராஜாவை, ஜெ., அறிமுகப்படுத்தியபோது நான்கு முறை குனிந்து கும்பிடு போட்டார்.
* அ.தி.மு.க., வில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு, முதல்வரிடம் உறுப்பினர் அடையாள அட்டை பெறுவது குறித்து, தனிப்பிரிவு போலீசாரால் ஒத்திகை செய்து காட்டப்பட்டது.


அ.தி.மு.க.,வில் இணைந்த 3,800 பேர்:



கமுதி ஒன்றிய தே.மு.தி.க., துணை செயலாளர் தாமோதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் அல்அமீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட 3,800 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: