கோவை: ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள்
திருப்பி விடப்படுவதாக மார்க்சிஸ்ட் கட்சியினரும் சமூக ஆர்வலர் டிராபிக்
ராமசாமியும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தலையொட்டி கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில்
போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின்
பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம்
மேற்கொள்ள உள்ளார்.
ஜெ. கூட்டத்துக்கு திருப்பி விடப்படும் பஸ்கள்: மார்க்சிஸ்ட், டிராபிக்
ராமசாமி புகார்!
இந்த கூட்டங்களில் கட்சியினர், பொதுமக்களை அழைத்து வர கோவையில் இருந்து
பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சுமார் 200க்கும் அதிகமான அரசு,
தனியார் பஸ்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் இன்று இயக்கப்படாததால்
பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர்
வி.ராமமூர்த்தி, தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், கூறியுள்ளதாவது: ''அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம் கோவையில் நடப்பதையொட்டி, இன்று காலை முதல்
பல்வேறு வழித்தடங்களிலும் இயக்கப்படும் பேருந்துகளை பொதுக்கூட்டத்துக்கு
ஆள் சேர்க்கும் வகையில் திருப்பி விட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக
பல்வேறு வழித்தடங்களில் பேருந்துக்கு காத்திருக்கும் பொதுமக்கள் பெரும்
சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
கட்சித்தலைவர்கள் பிரசாரத்திற்காக போக்குவரத்தை மாற்றி விடுவதும், தனியார்
பேருந்துகளை பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்க்க திருப்பி விடுவதும் தேர்தல்
நடத்தை விதிகளுக்கு எதிரானது ஆகும். எனவே அனைத்து வழித்தடங்களிலும்
பொதுமக்களுக்கு போக்குவரத்து ஒரே சீராக பயன்படுத்தவும், வழிதடத்தை மாற்றி
அனுப்ப உத்தரவிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என
தெரிவித்துள்ளனர்.
டிராபிக் ராமசாமி புகார்
இதேபோல், மக்கள் பாதுகாப்புக் கழகத்தலைவர் டிராபிக் ராமசாமியும் இது
தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ''மக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு
வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள், அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு
மாற்றி விடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தேர்தல்
ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளேன். நடவடிக்கை எடுக்காவிட்டல் வழக்கு
தொடருவேன்'' என்றார்.
மனுவினை பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரிகள், மனுவின் மீது விசாரித்து உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள் tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக