வியாழன், 3 ஏப்ரல், 2014

விஜயகாந்த் : 'ஏய் ராஜீவ்காந்தி' என அழைத்து கதிகலங்க வைத்தவர் வைகோ ! இத வேற வீரம்னு சொல்றானே பாவி ?


சிவகாசி: நாடாளுமன்றத்தில் ராஜீவ்காந்தியை.. ஏய் ராஜீவ்காந்தின்னு பெயர் சொல்லி கதிகலங்க வைத்தவர் அண்ணன் வைகோ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம் சூட்டி வாக்கு சேகரித்தார். விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலர் வைகோவை ஆதரித்து சிவகாசி நாராயணபுரம் பகுதியில் விஜயகாந்த் பேசியதாவது: அதிமுக, திமுகவுக்கே மீண்டும் மீண்டும் வாக்களித்து உங்களுக்கு கிடைத்தது என்ன? எங்களுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். நாங்கள் அனைவரும் இந்தியாவை வல்லரசாக்க, நரேந்திர மோடியை பிரதமராக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில்  விஜயகாந்த் வைகோவுக்கு வாக்கு கேட்பது பெருமிதம் முதன்முதலாக இஸ்லாமியர்களுக்காக வாஜ்பாயிடம் பேசியவர் வைகோ. அவருக்கு வாக்கு சேகரிக்க வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைவிட வயதில் மூத்த அண்ணன் வைகோவுக்கு வாக்கு சேகரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். 5 வி விஜயகாந்திற்கு முதல் எழுத்து வி. வைகோவிற்கு முதல் எழுத்து வி. விருதுநகருக்கு முதல் எழுத்து வி. வெற்றிக்கு முதல் எழுத்து வி. வாழ்த்துக்கு முதல் எழுத்து வி. இப்படி ஐந்து 'வி'யும் சேர்ந்து வைகோவை வெற்றி பெற வைக்கும். ம்ம் வீழ்ச்சிக்கும் வி எழுத்துதான் கூடவே வீணர்களுக்கும் வி எழுத்துதான் மனசுல வசுங்கள்   ராஜீவ் பெயரை .. நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தியை பெயர் சொல்லி அழைத்தவர் வைகோ. நாடாளுமன்றத்தையே கதிகலங்க வைத்தவரை, நீங்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழர் நலனுக்காக வைகோ குரல் கொடுப்பார். ஜெ.வை நம்பி ஏமாந்த வைகோ ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை ஏமாற்றுபவர் ஜெயலலிதா. நம்பி நம்பி ஏமாந்தவர் வைகோ. அவரை நீங்கள் கைவிடக் கூடாது. வைகோ டெல்லி போகனும்.. தமிழர்களின் பிரச்சினைகளுக்காக டெல்லியில் பேசக் கூடியவர் வைகோ. நான் போகிறேனோ இல்லையோ, வைகோ டெல்லி சென்று நமக்காக பேசுவார். பம்பரம் சுத்த.. முரசு கொட்ட.. பம்பரம் சுத்த சுத்த தாமரை மலரும், முரசு கொட்ட கொட்ட தாமரை மலரும். வைகோ மிகப் பெரிய பேச்சாளர். அவர் முன்பு எனக்கு பேச்சு வரவில்லை என்பதால் சீக்கிரமே உரையை முடித்துக் கொள்கிறேன்" என்றார் விஜயகாந்த். பின்னர் "உங்களது வேட்பாளரின் பெயர் என்ன?" என்று விஜயகாந்த் மீண்டும் மீண்டும் கேட்க, தொண்டர்கள் "வைகோ" என்று பதிலளித்தனர். நீங்கள் ஓட்டுப் போடும் சின்னம் என்ன என்று மீண்டும் கேட்க "பம்பரம்" என்று கூட்டத்தினர் பதிலளித்தனர். வைகோ ரசிப்பு.. விஜயகாந்த் பேசத் தொடங்கியது முதல் வைகோவின் முகத்தில் அடக்க முடியாத புன்னகை, சில இடங்களில் விஜயகாந்த் சொல்வதை ஆமோதிக்கும் வகையில் தலையை ஆட்டுவது என தனக்கேரிய மேனரிசங்களுடனே பிரசார வேனில் நின்று கொண்டிருந்தார் வைகோ.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: