புதுடில்லி:"விதிமுறைகளை மீறி செயல்பட்ட நிறுவனங்களின், 155 சுரங்க குத்தகை
உரிமங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில், சுரங்கத் துறை அமைச்சர் தீன்ஷா படேல் கூறியதாவது:சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள், விதிமுறைகளை மீறியதாக புகார் வந்ததை அடுத்து, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், குஜராத் உள்ளிட்ட இடங்களில் உள்ள, 454 சுரங்கங்களில், சிறப்பு படையினர், அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.இதில், சில நிறுவனங்கள், விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட, 155 சுரங்க குத்தகை உரிமங்கள், ரத்து செய்யப்பட்டன.சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை தடுப்பதற்கு, அரசு சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன், மத்திய அரசு, தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தாண்டில், சட்ட விரோத சுரங்க நடவடிக்கை தொடர்பாக, 25 ஆயிரத்து 713 வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளன.சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து, அபராதமாக, 755 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இரண்டு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, தீன்ஷா படேல் கூறினார்.
இதற்கிடையே, கர்நாடகாவில் நடந்து வரும், சுரங்க முறைகேடு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நேற்று, ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக