புதன், 5 செப்டம்பர், 2012

சீமான் வைகோ படையுடன் நைஜீரியா பயணம் 23 இந்திய மாலுமிகள் அங்கு பணயக் கைதிகள்!

Viruvirupu
இந்திய மாலுமிகள் 23 பேர் பணிபுரிந்த ஆயில் டேங்கர் கப்பல் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது என்ற தகவல், இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மாலுமிகள் 23 பேரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான லாகோஸ் துறைமுகம் அருகே வைத்து, டேங்கர் கப்பல் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் (Pioneer Ship Management Services LLC) ஒன்றுக்கு சொந்தமான டேங்கர் இது. சிங்கப்பூர் நிறுவனம், தமது கப்பல் கைப்பற்றப்பட்ட தகவலை இன்று ஸின்ஹூவா செய்திச் சேவையிடம் உறுதி செய்துள்ளது.
சர்வதேச கப்பல் சங்கம் IMB விடுத்துள்ள செய்திக் குறிப்பின்படி, ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் இந்த டேங்கர் கப்பலுக்குள் ஏறி, மாலுமிகளை தாக்கியபின், கப்பலை கைப்பற்றியுள்ளார்கள். தாக்குதலுக்கு உள்ளான மாலுமிகளில், இந்திய மாலுமிகளும் உள்ளனரா என்ற விபரம் தெரியவில்லை.
ஆனால், பணயக் கைதிகளில் 23 இந்திய மாலுமிகள் உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: