வெள்ளி, 7 செப்டம்பர், 2012

ஆசிரியைகளின் சேலையை மிதித்து தகாத முறையில் மாணவர்கள்




நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள திருமலாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. அதைச்சுற்றியுள்ள 10 பட்டி கிராமத்தின் மாணவ மாணவியர் 909 பேர்கள் இந்தப் பள்ளியில் பயினறு வருகின்றனர்.தலைமை ஆசிரியை மகேஸ்வரி அவரோடு 21 ஆசிரியைகள் 7 ஆசிரியர்கள் என 28 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே இந்தப்பள்ளியில் உள்ள மாணவர்களின் நடவடிக்கைகள் ஆசிரிய ஆசிரியைகளை மன உளைச்சலுக்குள்ளாக்கி இருக்கிறது.சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரை 9ம் வகுப்பு மாணவன் தாக்கியதால் டி.சி.கொடுத்து அனுப்பப்பட்டான். அதே போல் +1, +2 வலாற்று பிரிவு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் ஆசிரியைகளை கேலி செய்வது செல்போனில் அவர்களைப் படமெடுப்பது சேலைத் தலைப்பை காலால் மிதித்து அவர்களை உறவு முறை சொல்லி நக்கலடிப்பது போன்ற  தகாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.


இதனால் பொறுமை இழந்த ஆசிரியைகள் +2 மாணவர்கள் 4 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்தனர். ஆசிரியர்தினமான கடந்த 05.09.2012 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் 4 பேரும் பள்ளிக்கு வந்து சக மாணவர்களுடன் சேர்ந்து அத்துமீறத் தொடங்கினர்.
உதவி தலைமை ஆசிரியை ஆனி ஜேஸ்லின் தலைமையில் ஆசிரியைகள் பெற்றோர்கழக தலைவர் வீரகுமாரப்பாண்டியனிடம் முறையிட்டனர். இதையடுத்து 11 மாணவர்கள் மறு உத்திரவு வரும் வரை சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதைக்கண்டித்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையறிந்த துனை தாசில்தார் சந்திரன், டி.எஸ்.பி. கலிபுல்லா பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்குப்பின்பு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இத்தப் போராட்டத்தில் மாணவர்கள் அனைவரும் ஆசிரியை ஒருவரை சத்தம் போட்டதால் அவர் மயங்கி விழ பின்னர் அவர் சங்கரன்கோவில் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆசிரியை தினத்தன்று மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது பரபரப்பையும் நெருடலையும் ஏற்படுத்தியுள்ளது.  

கருத்துகள் இல்லை: