புதன், 5 செப்டம்பர், 2012

கனிமொழி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து???

Viruvirupu,
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தம்மை சேர்த்தது தவறு. அதனால் இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி தி.மு.க. எம்.பி. கனிமொழி தாக்கல் செய்த மனு, டில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
“மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கொள்கை வகுப்பதில், எந்த பதவியிலும் இல்லாத நான் எப்படி தொடர்பு பட முடியும்? கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எதிலும் நான் கையெழுத்திடவில்லை” என்று, தமது மனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஏ.கே.பதக் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. கனிமொழி சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கலைஞர் டிவியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் தாக்கல் செய்த மனுவும், கனிமொழியின் மனுவுடன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது. இதே கோரிக்கையை முன்வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

ஸ்பெக்ட்ரம் சூடு தணிந்து, சிறையில் இருந்த அனைவரும் வெளியே வந்துவிட்ட நிலையில், வழக்கில் இருந்து கனிமொழியை விடுவிப்பது தொடர்பில் சி.பி.ஐ. என்ன சொல்லப் போகிறது என்பது இன்று தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை: