சேலம் மாவட்டத்தில்
அங்கம்மாள் காலனியில் கடந்த ஜூன் 2ம் தேதி குடிசைகள் தீ வைத்து
எரிக்கப்பட்டன. இந்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்
உட்பட 30 பேர் மீது பள்ளப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை சேலம் இரண்டாவது நீதிமன்றத்தில் கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது. போலீஸார் வீரபாண்டி
ஆறுமுகம் மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய கால தாமதம் செய்ததை
காரணம் காட்டி,குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் வாதாடினார்.
இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி லட்சுமி
உத்தரவிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக