வியாழன், 6 செப்டம்பர், 2012

ஜெயலலிதா ஆட்சியில் நெடுமாறன் கூட்டம் ஊமையாவது ஏன்?

தமிழகத்தில் தினமும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இலங்கையில் இருந்து தமிழ் எம்.பி-க்கள் வந்து போகிறார்கள். ஆனால், கலைஞர் நடத்திய மாநாட்டுக்கு மட்டும் இவர்களைப் போகக்கூடாது என்று ராஜபக்ச அரசாங்கம் தடுக்குமானால், அதற்கு என்ன காரணம்?
கலைஞர் நடத்தும் மாநாடு உலக அளவில் கவனம் பெறும், இந்தியாவை ஆளும் அரசாங்கத்தின் மனதையும் மாற்றம் செய்ய வைக்கும் என்பது அங்கே இருக்கிற ராஜபக்சவுக்குத் தெரிந்துள்ளது. இங்கே உள்ள நெடுமாறனுக்கு எப்படித் தெரியாமல் போனது?
'டெசோ’ மாநாடு நடந்ததுமே கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் தலைவர் கலைஞரின் கொடும்பாவியை சிங்கள வெறியர்கள் எரிக்கிறார்கள்.
'விடுதலைப்புலிகள் வைத்திருந்த கோரிக்கையை முன்னெடுக்கும் மாநாடு தமிழகத்தில் நடக்கிறது’ என்று ராஜபக்ச, தான் பங்கேற்ற கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
இத்தகைய பீதியை இலங்கையில் உருவாக்கிய கலைஞரை, நெடுமாறன் போன்றவர்கள் பாராட்ட வேண்டாம். பழி தூற்றாமலாவது இருக்கலாமே!
'சகோதரச் சண்டையைத் தொடங்கி வைத்தவரே கலைஞர்தான்’ என்று வரலாற்றைத் திரிக்கும் காரியங்களைச் செய்ய வேண்டுமா? இப்படி ஒரு பழியைச் சுமப்பதற்காகவா தலைவர் கலைஞரும், பேராசிரியரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள்?
14 ஆண்டுகள் கழித்துக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தை ஒரு துளி மை மூலமாக மத்திய அரசாங்கம் 1991-ல் பறித்​ததும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு தானே காரணம்? '

விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் செயல்படுவதற்கு முதல்வர் கருணாநிதி துணை போகிறார் என, அன்று திட்டமிட்டு இன எதிரிகளால் உருவாக்கப்பட்ட சதியின் காரணமாகத்தானே தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதை இல்லை என்கிறாரா நெடுமாறன்.
'1983-ம் ஆண்டு​களில் போராளி இயக்​கங்களுக்குள் பிரச்சினை​களையும் கருத்து மோதல்​களையும் கலைஞர் உருவாக்​கினார்’ என்று 2012-ல் சொல்கிறார். நெடுமாறனுக்கு இது நேற்றுதான் தெரிந்ததா?
தலைவர் கலைஞர், பேராசிரியர், கி.வீரமணி, அய்யணன் அம்பலம் ஆகியோரோடு சேர்ந்து 'தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு’ உருவாக்கியவர்களில் ஒருவர் பழ.நெடுமாறன்.
கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை ஆகிய ஊர்களில் நடந்த பேரணிகளில் பங்கேற்று லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்களின் பங்களிப்பை மேடையில் நின்று பார்த்தபோது, நெடுமாறனுக்கு அது தெரியாதா?
வேலூர் டெசோ மாநாட்டில் மட்டும் அவர் பங்கேற்கவில்லை. ஈழத்துக்கு இரகசியப்பயணம் சென்று விட்டார்.
இது தொடர்பான அவரது கடிதத்தை, தலைவர் கலைஞரிடம் அப்போது எடுத்துக் கொண்டு போய் கொடுத்தவன் நான். கலைஞர் அந்தக் கடிதத்தை படித்துப் பதறிப் போய்விட்டார்.
'நீங்க எல்லாரும் சேர்ந்து இப்படி ஒரு காரியம் பண்ணீட்டீங்களே’ என்று நெடுமாறனின் உயிர்ப் பாதுகாப்பை நினைத்துக் கலங்கியவர் கலைஞர்.
1984-ல் மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க. ஆதரவு வேட்பாளராக போட்டியிட்ட போது நெடுமாறனுக்கு இது தெரியாதா?

அப்போது அவரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று ஆலோசனை சொன்னவர் முரசொலி மாறன். அதை மறந்து விட்டாரா?
தலைவர் கலைஞரை அரசியல் ரீதியாக, கொள்கைப்பூர்வமாக நெடுமாறன் போன்றவர்கள் விமர்சிக்கட்டும். ஆனால், வரலாற்றுச் சம்பவங்களுக்கு தவறான உள்நோக்கங்களைக் கற்பிக்கக் கூடாது.
ஈழத் தமிழர் துயர் துடைக்கப்பட வேண்டுமானால் அங்கு ஆயுதம் தாங்கிப் போராடும் அனைத்துப் போராளி இயக்கங்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று தலைவர் கலைஞர் நினைத்தார். அனைத்து அமைப்புகளுக்கும்தான் கலைஞர் அழைப்பு விடுத்தார்.
புலிகள் இயக்கம் அழைப்பை ஏற்காமல் போனதற்கான காரணத்தை திரு.பாலசிங்கம் அவர்களே எழுதி உள்ளார். 'அன்றைக்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களைப் பகைத்துக் கொள்வது நல்லதல்ல’ என, அன்று புலிகள் அமைப்பு முடிவெடுத்தது என்பதுதான் உண்மை.

மதுரை டெசோ மாநாட்டுக்கு அனைத்துப் போராளிகள் அமைப்புடன் புலிகளும் பங்கேற்றனர். தலைவர் கலைஞர் தனது பிறந்த நாளையட்டி திரட்டிய நிதியை அனைத்து இயக்கங்களுடன் சேர்த்து புலிகளுக்கும்தான் பிரித்துக் கொடுத்தார்.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதற்காகப் புலிகளுக்கு அவர் மறுக்கவில்லை. புலிகள் அமைப்பு அந்த நிதியைப் பெற விரும்பவில்லை. இத்தகைய உண்மைகள் இன்றைய தலைமுறைக்குத் தெரியாது என்பதால் நெடுமாறன் போன்றவர்களால் பொய்கள் புனையப்படுகின்றன.
1991-ல் இந்திய அமைதிப்படை திரும்பியபோது அதை வரவேற்கப் போகாதவர் கலைஞர். விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜெயலலிதாவால், வைகோவும் நெடுமாறனும் பொடா சட்டத்தில் கைதான போது அவர்களை சிறைக்குச் சென்று பார்த்தவர் கலைஞர்.
அவர்களது விடுதலைக்காகப் போராடியவர் அவர். புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட​போது முதல்வராக இருந்த கலைஞர் கவிதை வடித்தார்.

இறுதியுத்தம் நடந்தபோது 'போரை நிறுத்தாவிட்டால் தமிழக எம்.பி-க்கள் அனைவரும் பதவி விலக நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தவர். போரை நிறுத்திட தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம், மக்கள் மன்றத்தில் மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை தொய்வில்லாமல் கலைஞர் நடத்தினார்.
தமிழகம் முழுவதும் ஸ்தம்பிக்கும் அளவுக்குப் பந்த் நடத்தினார். இறுதி எச்சரிக்கையாக சென்னையில், அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்தார் தலைவர்.
இத்தனையும் தி.மு.க. தலைவர் என்ற முறையில் அல்ல... தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கலைஞர் நடத்திய போராட்டங்கள். இதை, இன எதிரிகள் எப்படி எல்லாமோ கொச்சைப்படுத்​தினர். அதைப் பற்றி கவலைப்படாமல் போராடினார். இதை நெடுமாறன் போன்றவர்கள் மறந்தாலும் காலம் மறக்காது.

எந்த ஜெயலலிதா தன்னைச் சிறையில் பூட்டினாரோ அவரைப் பற்றி நெடுமாறன் இத்தகைய தாக்குதலைத் தொடுப்பது இல்லை.
'போர் ஒன்று நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற இரக்கமற்ற பேச்சை நெடுமாறன் சுட்டிக்காட்டுவது இல்லை.
'புலிகள் இயக்கத்தைத் தடை செய்ததே நான்தான்’ என்று தனக்குத்தானே முதுகில் தட்டிக் கொண்ட ஜெயலலிதாவை விமர்சிப்பது இல்லை.
'போரை நிறுத்த வேண்டும் என்று கருணாநிதி சொல்வதே விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் முயற்சி’ என்று ஜெயலலிதா சொன்னதை நினைவுபடுத்துவது இல்லை.

'நெடுமாறன்தான் உண்மையான மாவீரன்’ என்று தலைவர் கலைஞர் அந்தக்காலத்தில் அனைத்துக் கூட்டங்களிலும் பேசுவார். அந்த உண்மையான மாவீரன், ஜெயலலிதா ஆட்சியில் ஊமையாவது ஏன்?

'தமிழீழம் அமையப் பாடுபடுவேன்’ என்று 2009-ல் ஜெயலலிதா அறிவித்தார். அதற்குப்பிறகு, என்ன செய்தார் ஜெயலலிதா? அதை அவர்களால் கேட்க முடியுமா? முடிந்ததா?

'கலைஞர் என்ன செய்தார்? தீர்மானம் போட்டார். கடிதம் அனுப்பினார்’ என்று குற்றம் சாட்டும் ஈழ ஆதரவுத் தலைவர்கள் என்ன செய்தார்கள்? கூட்டம் நடத்தினர். ஊர்வலம் சென்றனர் என்பதைத் தவிர வேறுஎன்ன செய்தனர்?

இன்றைக்கு, எம்.ஜி.ஆரை புகழ்ந்து அவர்கள் பேசலாம். ஆனால், அவரது ஆட்சிக்காலத்தில்தான் புலிகளிடம் இருந்து ஒயர் லெஸ் செட்டுகள் பறிக்கப்பட்டன. அதற்கு எதிராக பிரபாகரனே உண்ணாவிரதம் இருந்தார்.

கிட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது யாருடைய ஆட்சியில்? இதை எல்லாம் நெடுமாறன் மறந்து விடுவது ஏன்? நெடுமாறன் தியாகப்பயணம் செல்லும் போது தடுத்தது யார்?

டெசோவில் இருந்து பிரிந்து, போராட்டங்களை நடத்தியது யார் என்று அவரவர் மனச்சா

கருத்துகள் இல்லை: