செவ்வாய், 21 ஏப்ரல், 2026

தோழர் மகாலிங்கத்தின் சிகிச்சையை தடை செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கியூ உளவு பிரிவு

May be an image of one or more people and text that says "蜜1 சிறைப்பட்டோர் டார் ரிமை பாதுகாப்பு பாதுகாப்புமையம் மையம் Protoction Prot ights"

 Suresh Vijaya Rajan : தோழர் மகாலிங்கத்தின் முறையான சிகிச்சையை தடை செய்து,
அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்
கியூ உளவு பிரிவின் அராஜகங்களை #கண்டிப்போம்!
தோழர் மகாலிங்கம் மாவோயிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டுள்ள, 70 வயது முதியவர் ஆவார். 
இவர் இருதய நோய் காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த போதும், சிறைச்சாலை நிர்வாகம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை வழங்கவில்லை. 
இதய நோய் முற்றிய நிலையில், கடந்த மாதத்தில் சிறைச்சாலையில் டிஐஜி பார்வையிட்ட போது, தோழர் மகாலிங்கம் மயங்கி விழுந்ததால், வேறு வழியின்றி அவரை மதுரை பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 
மதுரை மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு, மருத்துவர்கள் அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை (open heart surgery) செய்தாக வேண்டும் என்று முடிவு செய்தனர்.  இப்போது செய்யவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக மாறும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். 


மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தலையீட்டின் பேரில் அவருக்கு திறந்த நெஞ்சக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அப்போதிருந்தே தமிழக உளவு பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து அவரது மருத்துவ சிகிச்சையை தடை செய்யும் வேலைகளை செய்து வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தனது அடுத்த உத்தரவு வரை அவரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், திறந்த மார்பக அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அவரை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவையும்மீறி சிறைச்சாலைக்கு கொண்டு போய் அடைக்க முயற்சிக்கின்றனர் க்யூப்பிரிவு போலீசார்.
சிறையில் அவசரத் மருத்துவத் தேவைகளுக்கோ, அல்லது பரிசோதனைகளுக்கோ தேவையான எந்த வசதியும் இல்லை. அவரைத் தொடர்ந்து கண்காணிக்க இதய சிறப்பு மருத்துவர்களும் இல்லை. மேலும் அவருக்கு உதவியாளர் நாள் முழுக்க கூட இருக்க முடியாது. நெஞ்சில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், நிமிர்ந்து கூட உட்கார முடியாத ஒரு நபரை, தனது உணவை கூட தானே பிசைந்து சாப்பிட முடியாத ஒரு நபரை, கழிவறை செல்லக் கூட மற்றவர்களின் உதவியை நாடி நிற்கும் ஒரு நபரை,  தேவையான மருத்துவ வசதிகள் அற்ற சிறைக்கு மாற்றுவது எத்தகைய கொடூர செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 May be a graphic of text 

 இது ஏதோ ஒரு சாதாரண சிறைப்பட்ட ஒரு தனி மனித பிரச்சனை அல்ல மாறாக தோழர் மகாலிங்கம் ஒரு அரசியல் சிறைவாசி. கடந்த காலங்களில் பண்ணையாதிக்கத்துக்கு எதிராக  சாதிய  நிலவுடமை கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த அவர் ஒரு புரட்சிகர அரசியல் செயல் வீரர் ஆவார்.
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் நாட்டின் துறைமுகங்களையும் கனிம வளங்களையும் சுரங்கங்களையும் தாரை வார்த்து வரும் இந்துத்துவா பாசிச சக்திகளுக்கு எதிராக போராடிவரும் ஜனநாயக சக்திகளையும் அறிவு ஜீவிகளையும் பழங்குடிகளையும் அவர்களுக்கு தலைமை கொடுத்து வரும் மாவோயிஸ்டுகளையும் படுகொலைகள் மூலமாகவும், அடக்குமுறை சட்டங்கள் மூலமாகவும் கைதுகள் மூலமாகவும் ஒடுக்கி வரும் இவர்கள் அறிவிக்கப்படாத ஒரு உள்நாட்டு யுத்தத்தை தொடுத்து பழங்குடிகளையும் புரட்சிகர சக்திகளையும் கொன்றொழித்து வருகின்றனர்.
 

 May be an image of text

அது மட்டும் இல்லாமல் இந்துத்துவ பார்ப்பனை சக்திகளுக்கு எதிரான சமரசமற்ற கருத்துக்களை தெரிவித்து வரும் அறிவுஜீவிகளை பாசிச குண்டர் படைகள் கொண்டு கொன்றுழித்து வருகின்றனர்.
இதையெல்லாம் கேள்வி கேட்கும் புரட்சிகர அறிவுசீவிகளை ஜனநாயக சக்திகளை  அர்பன் நச்சல்கள் என்று முத்திரை குத்தி சிறையில் அடைகின்றனர். அவ்வாறு சிறைபடுத்தப்பட்ட அருட்தந்தை ஸ்டான் சுவாமி, புரட்சிகர ஜனநாயக செயல்பாட்டாளர் தோழர் சாய் பாபா, ஆகியோரும் சமீபத்தில் முதிய அரசியல் சிறைவாசி தோழர் கிஷன் தா உள்ளிட்ட பல மாவோயிஸ்ட்டு சிறைவாசிகளும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் சிகிச்சை தரப்படாமல், சிறையில் அரசால் கொலை செய்யப்பட்ட வரலாறை நாம் அறிந்து உள்ளோம்.
 இந்த சூழலில் தோழர் மகாலிங்கத்திற்கு எதிரான க்யூ பிரிவின் மேற்படியான தொடர் முயற்சிகளை காணும் போது, (மருத்துவ உதவிகள் பெறுவதை தடுப்பதன் மூலமான)  ஒரு அரசியல் செயல்பாட்டாளரை, அரசியல் சிறைவாசியை அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு சிறைக்குள்ளேயே வைத்து  இன்னுமொரு கொலையை அரங்கேற்ற முயற்சிக்கின்றனர் என்பது நமக்கு புலப்படுகிறது.
 ஆகவே இதை எதிர்த்து புரட்சிகர, ஜனநாயக அறிவுஜீவிகள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஓரணியில் நின்று கண்டிக்க வேண்டுகிறோம் 
சிறைபட்டோர் உரிமை பாதுகாப்பு மையம்

கருத்துகள் இல்லை: