வியாழன், 6 செப்டம்பர், 2012

தமிழ் நடிகைகளின் உணவு பழக்கங்கள் ம்ம் ரொம்ப முக்கியம்

 ரீமாசென் - என்ன தான் வயதானாலும், இன்னும் கட்டுடல் சற்றும் களையாமல், இளமையோடு காட்சியளிப்பவர் தான் ரீமாசென். இவர் தன் உணவாக காலையில் வெஜிடேபிள் சான்விட்ச் + ஆம்லெட், மதியத்தில் சாதம் + பாதியாக வேக வைத்த காய்கறிகளும், இரவில் பிட்சா + தந்தூரி சிக்கனை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அனுஷ்கா - சரியான எடை மற்றும் உயரத்தைக் கொண்ட அனுஷ்கா, உண்மையில் ஒரு யோகா டீச்சர். இவரது எடை முதலில் 108 கிலோவாக இருந்தது. பின்னர் அவர் பல உடற்பயிற்சி, யோகா, உணவில் கட்டுப்பாடு என்பனவற்றை செய்து, பின்னர் ஒரு அழகான கனவுக் கன்னியாக அனைவரது மனதில் இடம் பிடித்தார். இவரது இந்த எடை குறைவிற்கு காரணமான ஃபுட் சார்ட் என்ன தெரியுமா? அவர் தினமும் காலையில் இட்லியும், மதிய வேளையில் சிக்கன் மற்றும் மீனும், இரவில் சப்பாத்தி மற்றும் சிக்கனும் தான் சாப்பிடுவாராம்.
த்ரிஷா - மிகவும் பிரபலமான நடிகை த்ரிஷா முதலில் மாடலிங்கில் இருந்து,
மிஸ் சென்னையாக இருந்தார். பின் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்து, அனைவரது மனதிலும் ஒரு சிறந்த நடிகை என்று பதிய வைத்தார். இவர் இன்றும் சற்றும் குண்டாகாமல், தன் அழகை அழகாக பராமரித்து வருகிறார். அந்த இரசியம் என்னவென்றால், அவர் தினமும் காலை வேளையில் முட்டையின் வெள்ளைக் கருவையும், மதியத்தில் சாதம் மற்றும் சப்பாத்தியும், இரவு நேரத்தில் எண்ணெய் குறைவாக பயன்படுத்திய சில்லி சிக்கனை சாப்பிடுவது தான் வழக்கமாம்.

ஸ்ரேயா - இடுப்பிற்கு பேர் போனவர் தான் ஸ்ரேயா. இவர் தன் அழகான ஒல்லியான இடுப்பை வைத்தே அனைவரையும் கவர்ந்தவர். இவர் மேற்கொள்ளும் உணவு முறை மிகவும் சூப்பரானது. அது அவர் காலை வேளையில் தோசை, மதியத்தில் சப்பாத்தி மற்றும் இரவில் ஆம்லெட் மட்டும் தான் சாப்பிடுகிறார். ஆனால் திரையுலகில் இருப்பவர்கள் ஸ்ரேயாவிற்கு பர்க்கர் தான் ரொம்ப பிடிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
அசின் - கேரளத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருந்தவர் தான் அசின். இவர் தன் அழகான பேச்சாலும், சிரிப்பாலும் தமிழ் நாட்டு ரசிகர்களை கவர்ந்து, சிறிது நாட்கள் கனவுக் கன்னியாக இருந்தவர். இப்போது இவர் இந்தியிலும் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன் உடலை பிட்டாக வைக்க காலையில் ஓட்ஸ், மதியத்தில் மட்டன் பிரியாணி மற்றும இரவில் சப்பாத்தியுடன் மீன் குழம்பை வைத்து சாப்பிடுவாராம். இதுவே இவரது உடலின் இரகசியம் என்றும் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை: