புதன், 22 ஏப்ரல், 2026

நடிகர் விஜய்-ன் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது!

Vijay Changed His Plane Mid-Campaign ...

 பாலகணேசன் அருணாசலம்  :  நடிகர் விஜய்-ன் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது!
முதலில் வருமான வரித் துறையை வைத்து விஜய்-ஐ வளைத்தது பா.ஜ.க! 
அடுத்து... அந்த விஜய்-ஐ 'ஜோசப் விஜய்' என்று. எச். ராஜாவை ஏவி விட்டு மத அடையாளப்படுத்தியது பா.ஜ.க!
அதனை தொடர்ந்து விஜய்-ஐ கட்சி தொடங்க கட்டளையிட்டது பா.ஜ.க! 
₹1,000 கோடி மோசடியில் அமலாக்கப் பிரிவிடம் சிக்கிய லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் தொடங்கி,
விஜய் மீதான வருமான வரி சோதனையை முன்னின்று நடத்திய I.R.S., அதிகாரி அருண்ராஜ், பா.ஜ.க-விடம் அரசியல் அபயம் தேடி டெல்லிக்கு ஓடி வந்த செங்கோட்டையன்,


R.S.S-ல் பயிற்சி பெற்று, தமிழக பா.ஜ.க-வில் தகவல் தொழில் நுட்பத்துறை தலைவராக இருந்த நிர்மல் குமார் ஆகிய இவர்கள் எல்லோருக்கும் மேலாக, புதுவை மாநிலத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் ரங்கசாமி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., புஸ்ஸி ஆனந்த் வரை, விஜய் கட்சிக்கான மொத்த நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்து, பனையூருக்கு அனுப்பி வைத்ததும் பா.ஜ.க.-தான்!
இவ்வளவும் போக, அனைத்தும் சரியாக நடக்கிறதா என்பதை. Y-பிரிவை வைத்து கண்காணித்துக் கொண்டிருப்பது பா.ஜ.க! 'ஏதேனும் சேட்டை செய்தால், சோலியை முடித்து விடுவோம்!" என கரூர் சம்பவத்தில் C.B.I-ஐ வைத்து 'சுறா'வுக்கு வலை போட்டு வைத்திருப்பது பா.ஜ.க! இந்த திரைக் கதையும், திரை மறைவு பின்னணியும் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காக. தங்களை கொள்கை எதிரி என குறிப்பிடச் சொன்னதும் பா.ஜ.க.-தான்!
ஆக, திராவிடத்திலிருந்து தமிழினத்தை பிரிக்க சீமானை ஆயுதமாக்க முயன்று வரும் பழைய ஏற்பாட்டின் அதே பா.ஜ.க.-வின் புதிய ஏற்பாடுதான். விஜய்-ன் தற்காலிக வெற்றுக் கழகம் (TVK).
தி.மு.க.-வுக்கு பெரும் பலமாக இருக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிக்கவும், சிதைக்கவும் பா.ஜ.க.-வின் பிரத்தியேக மற்றும் பிரம்மாண்ட ஏற்பாடுதான் நடிகர் விஜய்!

கருத்துகள் இல்லை: