செவ்வாய், 4 செப்டம்பர், 2012

பி.ஆர்.பி யின் பயம். அமைச்சர்களை பாதுகாக்க என்னை போட்டு தள்ளிவிடுவார்கள்

அமைச்சர்களுக்கு நான் அள்ளிக்கொடுத்த விவகாரங்களும் என் மூலம் வெளியே வரலாம் என்று நினைக்கிறது. எனவே நான் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது என்று யோசிக்கும் நிலைக்கு அது வந்துவிட்டது. போலீஸ் தரப்பிலிருந்தே எனக்கு இந்தத் தகவல் வந்தது. "உஷாராக இரு' என்று சொல்கிறார்கள்
போலீஸின் கஸ்டடி விசாரணைக்குப் பின் பாளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ’கிரானைட் மோசடி மன்னன்’ பி.ஆர்.பி., சிறைவாசத்தை ஜீரணிக்க முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார். ஏ.சி. குளிரிலேயே சுகபோகமாக வாழ்ந்த பி.ஆர்.பி.யால் ஜெயில் வெயிலைத் தாங்க முடியவில்லை.
எப்பொழுதும் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு வெறும் வேட்டியோடு பெட்ஷீட்டைப் போட்டு படுத்து உருள்கிறார். அவரால் பலனடைந்த பலரும், தங்கள் பெயரை பி.ஆர்.பி. எங்கும் சொல்லிவிடக் கூடாதே என்ற பதட்டத்தில் சிறைக்கு வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். சிலர் வேறு பெயர்களில் வந்து பி.ஆர்.பி.யை நலம் விசாரிக்கிறார்கள்.

தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் பி.ஆர்.பி. ""என் வழக்கு சி.பி.ஐ. கைக்குப் போகக் கூடாது என்று மேலிடம் நினைக்கிறது.
அப்படிப் போகும் பட்சத்தில் மேலிடத்துக்கும் எனக்கும் இருக்கும் கரன்ஸித் தொடர்புகள் வெளியே வரலாம் என்று அது பயப்படுகிறது. அதுமட்டுமல்ல, பல அமைச்சர்களுக்கு நான் அள்ளிக்கொடுத்த விவகாரங்களும் என் மூலம் வெளியே வரலாம் என்று நினைக்கிறது. எனவே நான் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது என்று யோசிக்கும் நிலைக்கு அது வந்துவிட்டது. போலீஸ் தரப்பிலிருந்தே எனக்கு இந்தத் தகவல் வந்தது. "உஷாராக இரு' என்று சொல்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது''’ என்று கலக்கத்தோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

’எப்படி இருந்த ஆள், இப்படி மாட்டிக்கிட்டாரே’ என பி.ஆர்.பி. மீது பரிதாபப்பட்ட சில கைதிகள், அவருக்கு டீயும், குளிக்க வெந்நீரும் போட்டுக்கொடுக்கிறார்கள். இதற்கு பிரதியுபகாரமாக அவர்களுக்கு, தனக்கு வரும் பழங்களையும் பிஸ்கட்டுகளையும் அள்ளிக் கொடுக்கிறார் பி.ஆர்.பி. தனக்கு மன அழுத்தத்தால் நெஞ்சு வலி வரலாம் என்று பயப்படுகிற பி.ஆர்.பி., எப்போதும் மருந்து மாத்திரைகளை தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டிருக்கிறார்.  பி.ஆர்.பி.யின் வழக்கறிஞர் வீர.கதிரவனோ ""பி.ஆர்.பி.க்கு வீட்டு சாப்பாடு கூட கிடைக்கக் கூடாது என்றுதான், கருணையே இல்லாமல் அவரைக் கொண்டு போய்ப் பாளையங்கோட் டையில் அடைத்திருக் கிறார்கள். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் பயப்படுகிறார். எப்படியாவது பி.ஆர்.பி.யை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் வெடிமருந்துப் பதுக்கல், கனிம வளத்தைத் திருடியதால் தேசத் துரோகம் என்றெல்லாம் புதுப்புது வழக்குகளை அன்றாடம் புனைந்து கொண்டிருக்கிறார்கள். மதுரை போலீஸின் இது போன்ற பொய் வழக்குகளை நாங்கள் சட்டத்தின் மூலமே உடைத்தெறிவோம்''’ என்கிறார் நம்பிக்கையோடு.

போலீஸ் கஸ்டடி விசா ரணையின் போது என்ன நடந்தது? என காக்கிகள் தரப்பிலேயே விசாரித்தபோது, ""முதல் இரண்டு நாள் சாதாரணமாக விசாரணை நடந்தது. அதனால் தோரணை யாகவே இருந்தார். இரவில் சட்டை யைக் கழற்றிப் போட்டுவிட்டு ஹாயாகத் தூங்கினார். அரசியல் வாதிகள் குறித்து விசாரணை அதிகாரிகள் கேட்டபோது.. "அரசியல்வாதிகளையும் என்னிடம் பணம் வாங்கி எனக்கு விசுவாசமாக நடந்துகொண்ட அதிகாரிகளையும் காட்டிக் கொடுக்கமாட்டேன்' என்று தெம்பாகவே சொன்னார் பி.ஆர்.பி. கடைசி நாளான ஞாயிற் றுக்கிழமைதான் கொஞ்சம் கறாராக டி.எஸ்.பி. தங்கவேல் விசாரிக்கத் தொடங்கினார். பண டீலிங்குகள், சொத்துக்கள் பற்றிய கேள்வி களுக்கு, "என் உதவியாளர் ஐயப்ப னைக் கேட்டால்தான் தெரியும். என் மேனேஜர் சண்முகவேலைத் தான் கேட்கணும்' என்ற ரீதியிலே யே பதில் சொன்னார். "சரி எப்படி யெல்லாம் முறைகேடுகளைச் செய்தாய்.. ஒழுங்கா எல்லாத் தையும் சொல்லிவிடு' என கோபமாக டி.எஸ்.பி. கேட்ட போது, அடி விழுந்துவிடுமோ என்று முகம்வெளிறிப் போய்விட்டார் பி.ஆர்.பி. உடனே "எனக்கு நெஞ்சு வலிக்கிது, ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கு...' என்ற படி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தார். இதனால் அவரை இரண்டு தடவை ஜி.ஹெச்.சுக்குக் கொண்டு போக வேண்டியிருந்தது'' என்றார்கள் நமட்டுச் சிரிப்போடு.

இந்த நிலையில் ""மிகவும் சக்திவாய்ந்த ஒருவர், மதுரையில் கடந்த ஐந்தாறு நாட்களாகத் தங்கியிருக்கிறார். பி.ஆர்.பி. தரப்பிடமிருந்து வரவேண் டிய பழைய பாக்கிகள் குறித்து டீலிங் பேசிக்கொண்டிருக்கிறார்'' என்கிறார்கள்.

இப்போதைய போலீஸின் தீவிரக் குறி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிதான். துரை தயாநிதியின் முன்ஜாமீன் மனு, செப்டம்பர் 4-ஆம் தேதிக்குத் தள்ளிப்போயிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே அவரைக் கைது செய்துவிடவேண்டும் என்று பரபரக்கிறது காவல்துறை. மதுரை வீடு, சென்னை வீடு என பல பகுதிகளிலும் தயாநிதியைத் துழாவிய போலீஸ், அவரை சரண்ட ராகச் சொல்லும்படி அவரது நண்பர்கள் தரப்பிற்கும் நெருக்கடி களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மு.க.அழகிரிக்கோ தன் மகன் சரணடைவதில் விருப்பம் இல்லை. அவர் சட்ட ரீதியாக முன் ஜாமீனை வாங்கிவிட்டு வழக்கை எதிர்கொள்ளும் முடிவில் இருக் கிறார். எனினும் காவல்துறையின் துரத்தல் அவரை ரொம்பவே மன சஞ்சலத்தில் ஆழ்த்தியிருக்கிறது. போலீஸின் தீவிரக் கண்காணிப்பைக் கண்ட துரை தயாநிதி சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனது சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘கிளவுடு நைன்’ அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு, அங்கிருந்த பொருட்களை மதுரைக்கே கொண்டுபோய்விட்டார். துரை தயாநிதி முன் ஜாமீன் வாங்கிவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் ஆட்சி மேலிடம், முக்கியமானவர்களை விஜிலென்ஸைக் கொண்டு கண்காணித்து வருகிறது. இதற்கிடையே பி.ஆர்.பி.யின் மகன்களான செந்தில்குமாரும் சுரேஷ்குமாரும் சரணடைய 2 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறது போலீஸ். சரண டையாவிட்டால் குடும்பப்பெண்களை ஸ்டேஷனுக்குக் கொண்டுபோவோம் என்றும் அது எச்சரித்திருக்கிறது. எனவே அடுத்த கைது படலங்கள் விரைவில் அரங்கேறும் என்கிறார்கள் மதுரை காக்கிகள்.

-முகில்
படங்கள்: அண்ணல்

thanks nakkeeran + ahamed Malaysia, klang

கருத்துகள் இல்லை: