புதன், 5 செப்டம்பர், 2012

கயவர்கள்! மாணவர்கள், பெண்கள் குழந்தைகளை விரட்டிய

Viruvirupuமாணவர்களை  விரட்டும்  பணிகள், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரிலும், தமிழகத்தின்  கட்சிக்காரர்களாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

“இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கால்பந்து விளையாட வந்த மாணவர்களை தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. திருவாரூரில் உள்ள சர்ச்சுக்கு வந்த பக்தர்களும் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இந்த இரு சம்பவங்களுக்கும் நாம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்த விரட்டல் பணிகள், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரிலும், தமிழகத்தின் ‘உணர்வு மிக்க’ கட்சிக்காரர்களாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
முதல்வர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் கால்பந்து போட்டி விளையாட சென்னை வந்துள்ள இலங்கை, ரத்தினபுராவை சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் ஆகியோரை திருப்பி அனுப்பிட நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.
மற்றொரு கால்பந்து குழு, கொழும்பு ராயல் கல்லூரியின் ஏற்பாட்டில் சென்னை வந்திருந்தது.
தமிழக அரசின் துரித நடவடிக்கைகளால், இங்கு வந்திருந்த மாணவர்களும், பயிற்சியாளர்களும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
விரட்டிய விரட்டலில் பதறி ஓடினர்
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மற்றும் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த செயல் வீரர்கள், பூண்டி மாதா திருக்கோயில் விழாவிலும் பங்கேற்க வந்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கற்கள், செருப்புகள் வீசி தாக்கி விரட்டியடித்தனர்.
தாக்குதல் தாங்கமுடியாமல், தமது குழந்தைகள் மீது கற்கள் படாமல் தடுத்தபடி பதறியோடினார்கள் அவர்கள்.
அப்படியிருந்தும், அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வியூகம் வகுக்கப்பட்டது. தப்பியோடிய அவர்களை ஏற்றிச்சென்ற பஸ்கள் திருச்சி செல்லும் பாதையில் சென்றபோது, அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர் செயல்வீரர்கள்.
மின்னல் வேக தாக்குதல்தான் என்றாலும், பெண்கள், குழந்தைகள் முதியவர்களுக்கு போதிய ரத்த காயங்களை இந்த தாக்குதல்களால் ஏற்படுத்த முடியவில்லை. அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த தீரச் செயல்களைதான் கண்டித்துள்ளது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
“இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள மக்களிடையே நட்பு சக்தியை ஊக்குவிப்பதை விட்டு, திருப்பி அனுப்பியது தவறான செயலாகும். இதனால் இருநாட்டு மக்களின் உறவு முறைகள் பெரிதும் பாதிக்கப்படும். வரும் காலத்திலாவது இலங்கை மக்களுடன் மனதிற்கு இசைவான நல்லுறவை வளர்க்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ, இன உணர்வாளர் பழ. நெடுமாறன் ஆகியோர், “மாணவர்கள் விரட்டப்பட்ட செயலை பாராட்டுகிறோம். ‘துணிச்சலாக’ உரிய நடவடிக்கை எடுத்து அனைவரையும் விரட்டியடித்த தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி” என்று தெரிவித்திருந்தனர்.
“கால்பந்து விளையாட வந்த மாணவர்களை விரட்டியடித்தது தவறு” என்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை: