ராதா மனோகர் : இந்திய ஒன்றியத்தின் delimitationனும் இலங்கை பொன்னம்பலத்தின் fify fifty கோரிக்கையும்
மணிமேகலை பிரசுரமானது அமரர் ஜி ஜி பொன்ன்னம்பலம் அவர்களின் நீண்ட பேச்சை முன்பு நூலாக வெளியிட்டிருக்கிறது
இந்நூலின் பெயர் The Marathon Crusade for 'Fifty, Fifty'
1939 இல் இலங்கையில் பிரித்தானியவின் சோல்பரி கமிஷன் முன்பாக தோன்றி திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு 50 வீத உறுப்புரிமை வேண்டும் என்று கோரிகை விடுத்தார்
சுமார் 9 மணித்தியாலங்கள் இது பற்றிய நீண்ட உரையை அவர் நிகழ்த்தி இருந்தார்
![]() |
இந்த நீண்ட உரையில் அவர் கூறிய முக்கிய விடயமானது ஒரு பெரும்பான்மை இனமானது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் பலத்தை மட்டும் கொண்டு இன்னொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதாகும்
ஒரு உண்மையினை ஜனநாயக அமைப்பில் இனரீதியான அல்லது மதரீதியான பெரும்பான்மைவாதம் என்பது காலப்போக்கில் வரை முறையற்ற அதிகார வரம்பு மீறலுக்கு வழிவகும் என்று குறிப்பிட்டிருந்தார்
இன்றைய இந்திய ஒன்றியத்தின் வரை முறையற்ற தொகுதி நிர்ணய முனைப்பானது அன்று திரு ஜி ஜி பொன்னம்பலம் பிரித்தானிய காலனித்துவ அரசுக்கு கூறிய விடயங்களை நினைவு படுத்துகிறது
குடும்ப நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தி குடிமக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு இன்று தொகுதிகள் குறைக்க முயற்சி எடுக்கப்படுகிறது
மறுபுறத்தில் குடும்ப நலத்திட்டங்களை புறந்தள்ளி அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை சூறையாடிதன் மூலம் அல்லது தங்கள் இனத்தின் குடிமக்கள் தொகையை திட்டமிட்டே அதிகப்படுத்திய மாநிலங்களுக்கு மிக அதிகமான தொகுதிகளை உருவாக்க ஒன்றிய அரசு முயல்கிறது
இதன் மூலம் தென் மாநிலங்கள் நிரந்தரமான ஒரு நவ காலனித்துவ ஆட்சிக்கு கீழ் வரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
திரு ஜி ஜி பொன்னம்பலம் அன்று இலங்கைக்கு முன்வைத்த கோரிக்கையான 50 க்கு 50 கோரிக்கையை
இன்று இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொகுதி நிர்ணய விடயத்தில் கவனத்தில் கொள்ளுதல் நல்லது.
திட்டமிட்டே ஒரு இனம் அல்லது ஒரு மாநிலம் குடிமக்கள் தொகையை அதிகரித்து அதே காரணத்தை முன்வைத்து இன்னொரு மாநிலத்தை நிரந்தர காலனித்துவ அடிமை மாநிலமாக்க முயன்றால் அது என்ன என்ன விளைவுகளை எதிர்காலத்தில் உண்டாகும் என்பதை அறியாத பாமரர்களாக இன்றைய ஒன்றிய அரசு இருக்கிறது போலும்?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக