சென்னை :ஐந்து பேரை மட்டுமே திருமணம் செய்தேன். மற்றவர்களை திருமண
ஆசை காட்டி பணம், நகைகளை மட்டும் வாங்கிவிட்டு தலைமறைவானேன் என்று கல்யாண
ராணி சஹானாஸ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இளைஞர்களை பலரை திருமணம்
செய்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட கல்யாண ராணி சஹானாஸ் போலீசில்
அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: சொந்த ஊர் கேரள மாநிலம் பத்லசிட்டா.
எங்கள் குடும்பம் வறுமையில் வாடியதால் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட
சிரமப்பட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்து விட்டார். தாயும்
வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆதரவன்றி தவித்தேன். அன்பு
செலுத்த யாருமில்லை. இந்த நேரத்தில் கேரளாவை சேர்ந்த சித்திக் என்பவருடன்
பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு
ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஒரு வயதான போது கருத்து
வேறுபாட்டால் பிரிந்து விட்டோம். குழந்தை கணவரிடம் உள்ளது. அதன் பிறகு
2005ல் வேலை தேடி சென்னை வந்தேன். வேப்பேரியில் உள்ள சூப்பர்
மார்க்கெட்டில் வேலை செய்த போது, வாடிக்கையாளராக திருவொற்றியூரை சேர்ந்த
சரவணன் அறிமுகமானார். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம்
செய்து கொண்டோம்.
பிளஸ் 2 படித்த நான், சரவணனிடம் வக்கீலுக்கு படிப்பதாக கூறினேன். கல்லூரியில் தோழிகள் ஆடம்பரமாக செலவு செய்வதாகவும், நகைகள் அணிந்து வருவதாகவும் கூறினேன். அதை நம்பி, தான் அணிந்திருந்த செயின், மோதிரங்களை எனக்கு தந்தார். ஒரு மாதம் அவருடன் குடும்பம் நடத்தினேன். பின்னர் முகலிவாக்கம் மணிகண்டன், புளியந்தோப்பு பிரசன்னா, யானைக்கவுனி சினிமா ஆர்ட்டிஸ்ட் ராகுல் ஆகியோரை திருமணம் செய்து கிடைத்த நகை, பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தேன். ஒவ்வொருவரிடமும் தனித்தனி செல்போன் நம்பர் கொடுத்தேன். இதனால் யாருக்கும் என் மீது சந்தேகம் வரவில்லை. மற்றவர்களிடம் நகை, பணத்தை மட்டும் சுருட்டி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றினேன். எனினும், என்னுடன் பழகிய அனைவரையும் எல்லா விஷயத்திலும் திருப்திப்படுத்தினேன். நட்பு வட்டாரங்கள் அதிகரித்ததால் தகராறு அதிகரித்தது. அதன்பின், விஷயம் தெரிந்து போலீசில் புகார் கொடுத்தனர். இதனால் தோழி பிரியா மூலம் ஆந்திரா, பெங்களூர் சென்று தலைமறைவானேன். பெங்களூரில் இருந்து தப்பி செல்ல மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போதுபோலீசார் மடக்கி விட்டனர். இவ்வாறு போலீசில் சஹானாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சஹானாஸ் குளிக்க சோப்பு, ஷாம்பு :சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்துக்கு சஹானாஸை போலீசார் அழைத்து சென்ற தகவல் பரவியதும் அவரை பார்க்க பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். காலையில் 3 இட்லி, சட்டினி, சாம்பார் ஆகியவற்றை சாப்பிட்ட சஹானாஸ், மதியம் பிரியாணி வேண்டும் என போலீசாரிடம் கேட்டுள்ளார். பத்திரிக்கை கேமராமேன்கள் போட்டி போட்டி புகைப்படம் எடுக்கும் போது, அவர் வெட்கப்படவில்லை. அனைவரையும் பார்த்து சிரித்தார். சஹானாஸ் குளிக்க சோப்பு, ஷாம்பு, சென்ட் வாங்கி வைத்திருந்தனர்.
கர்ப்பமா ? :புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னாவுடன் சஹானாஸ் 3 மாதங்கள் சென்னையில் குடும்பம் நடத்தியுள்ளார். இதன்பிறகு அவர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், போலீசில் பிரசன்னா புகார் அளித்த போது, சஹானாஸ் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் சஹானாசுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.. தமிழ் செய்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக