கரீனா சைபை காதலிக்க ஆரம்பித்தபோது சிறுமியாக இருந்த சாரா தற்போது குமரியாகிவிட்டார். அந்த அழகிய குமரி அண்மையில் நடந்த பேஷன்ஷோ ஒன்றில் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. அந்த புகைப்படங்களில் சாரா அழகு தேவதையாக காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் சாராவுக்கு ஏராளமான படவாய்ப்புகள் வந்து குவிகிறதாம். ஆனால் அவர் இதுவரை எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருக்கு பட வாய்ப்புகள் வருவது தான் கரீனாவுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. கரீனாவின் இந்த பதட்டத்திற்கு காரணம் இருக்கிறது. சாரா நடிக்க வந்தால் 'கரீனாவின் மகள் ஹீரோயினாகிவிட்டார்' என்று செய்தியாளர்கள் கொட்டை எழுத்தில் தலைப்பைப் போட்டு செய்தி வெளியிட்டுவிடுவார்கள் அல்லவா அந்த பயம் தான் அம்மணிக்கு. பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருக்கும் தன்னை ஒரு இளம்பெண்ணின் தாயாக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் தான் அவர் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக