புதன், 5 செப்டம்பர், 2012

முட்டாள் தமிழக அரசியல்வாதிகளே! வாங்க மலை உச்சிக்கு” -இலங்கை அமைச்சர்!

Viruvirupu
நம்ம அரசியல்வாதிகள் பொங்கி எழ, இதோ அற்புதமான ஒரு விவகாரம். இதற்குமுன் இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இப்படியொரு கூற்றை கூறப்போக, தி.மு.க. முதல் எமது அனைத்து அவரியல்வாதிகளும் அவரை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள்.
இம்முறை இந்தக் கூற்று, இலங்கை அமைச்சரிடம் இருந்து வந்திருக்கிறது.
“தமிழகத்தின் முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ள இலங்கை வீடமைப்பு துறை அமைச்சர் விமல் வீரவன்ச, “இவர்களது முட்டாள்தனத்துக்கு சாதாரண இடத்தில் வைத்து பயிற்சி கொடுத்தால் போதாது. இலங்கையின் அதியுயர் மலை உச்சியான பிதுருதலாகல மலை உச்சிக்கு அழைத்து வந்து, பயிற்சி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அடாடா.. என்னாச்சு? என்ன காரணம்?

விளக்கம் கொடுக்கிறார், விமல் வீரவன்ச: “எமது நாட்டில் இருந்து சென்ற கால்பந்தாட்ட வீரர்கள், புனித யாத்திரை செல்வோர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களது (இந்தியா) நாட்டில் இருந்து விமானம் விமானமாக ஆட்கள் வந்திறங்கி, கொழும்பு வீதிகளில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இங்கே இந்தியர்கள் மீது நாம் தாக்குதல் நடத்தினால் என்னவாகும்?
ஆனால் நாம் கோழைகள் போல பொதுமக்களை தாக்க மாட்டோம். இதை புரிந்துகொள்ள முட்டாள் தமிழக அரசியல்வாதிகளுக்கு நிஜமாகவே பயிற்சி கொடுக்க வேண்டும்” என்று கொழும்புவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார் அவர்.
இதற்குமுன் இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அடித்த காமென்ட் என்ன? “தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்” என்று கூறியிருந்தார். அதற்கே தமிழக அரசியலில் பூகம்பம் கிளம்பியது!
அவராவது சுருக்கமாக ஒரு வார்த்தையில் கூறினார். ஆனால், இந்த வீரவன்சவோ, “தலையுச்சியில் ஸ்டஃப் இல்லாத ஆசாமிகளே வாருங்கள் மலையுச்சிக்கு” என்று படம் வரைந்து பாகங்களை குறித்திருக்கிறாரே!
அண்ணே… புடிங்க பந்தை! திருப்பி அடிங்க சிக்ஸர்!!

கருத்துகள் இல்லை: