நிலக்கரிச்
சுரங்க முறைகேட்டை பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் எழுப்பி, அனைத்தையும்
ஸ்தம்பிக்க வைத்த நிலையில் மத்திய அரசு, “நிலக்கரிச் சுரங்க உரிமங்களை
ரத்து செய்வது இயலாத காரியம். அதனால் ஏகப்பட்ட சிக்கல்கள் எழும்” என்று
கூறியிருந்தது. இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்
போலிருக்கிறது.
தனியாருக்கு ஒதுக்கப்பட்ட 60 நிலக்கரிச் சுரங்க
உரிமங்களை ரத்து செய்யலாம் என்று அமைச்சகங்கள் குழு கூறியுள்ளது.
டெல்லியின் இன்று நடைபெறும் அமைச்சகங்கள் குழுக் கூட்டத்தில் இதற்கான
குறிப்பு, விவாதத்துக்கான பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.1993-ம் ஆண்டு முதல் இதுவரை ஒதுக்கப்பட்ட 90 நிலக்கரி சுரங்கங்களில் 60 நிலக்கரிச் சுரங்கங்களை ரத்து செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சுரங்களில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் 670 கோடி டன் நிலக்கரியின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் என்றும் இந்தக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தக் குழு குறிப்பிட்டிருக்கும் 60 சுரங்கங்களில் 57 சுரங்கங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், 7 சுரங்கங்கள் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்திலும் ஒதுக்கப்பட்டவை
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிலக்கரி உற்பத்தியைத் துவக்க முடியாது என்று கருதப்படும் அனைத்து சுரங்க உரிமங்களையும் ரத்து செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பா.ஜ.க.-வின் ரியாக்ஷன் எப்படி இருக்க போகிறது பார்க்கலாம்.
ஏனென்றால், நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமன்றி, பா.ஜ.க.-வுக்கும் தேர்தல் நிதி வாரி வழங்குபவர்கள்.
இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்க உரிமங்களை விடுங்கள். இந்திய நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாக இன்றைய தேதியில் அளவில் உலக அளவில் கண்டனம் தெரிவிக்கப்படுவது, அங்குள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் பணிபுரிவதும், இந்த தொழில்ல் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழந்தை தொழிலாளர்கள் விவகாரமும்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக