வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்

பதவி உயர்விலும் இடஒதுக்கீடு எஸ்.சி., எஸ்.டி.களுக்கு அளிப்பதும் வரவேற்கத்தக்கது பிற்படுத்தப்பட்டவருக்கும் அளிப்பது ஏற்புடையதே! கழகத் தலைவர் வீரமணி அறிக்கையைச் சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

 தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத் தப்பட்டவருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.
கலைஞர் அவர்கள் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தாழ்த்தப்பட்டோருக்கும்,  பழங்குடியினருக்கும்  தற்போது வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு  அளிக் கப்படுகிறது.  பதவி உயர்விலும்  இட ஒதுக்கீடு  அளிக்க அலகாபாத் உயர்நீதி மன்றமும், அதைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றமும் தடை விதித்த காரணத்தால்,  நாடாளு மன்றத்தில்  அதற்காக சட்டம் இயற்ற மத்திய அரசு தீர்மானித்தது.  ஆனா லும் கடந்த சில நாட்களாக நாடாளு மன்றம் அன்றாடம் முடக்கப்படும் நிலையில்,  பதவி உயர்வில் இட ஒதுக் கீடு அளிக்க வகை செய்யும் மசோதா வினை இந்தத் தொடரில் நிறைவேற்ற இயலுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.   பதவி உயர்விலும் அரசுப் பணிகளில்  எஸ்.சி., எஸ்.டி., பிரிவின ருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும்  சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்தச் சட்டத் திருத்தத்தை நமது அமைச்சர் நாராயணசாமி அவர்கள் தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.  அவர் அளித்த பேட்டி யிலே கூட  இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற  காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.   இன்றைக்கும் நாடாளுமன்றத்தில்  அமளி நிலவிய போதிலும், அதற்கு மத்தியில்  அரசுப் பணிகளில், பதவி உயர்வில்  எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு  இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா  மாநிலங்களவை யில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டத் திருத்தத்தை சமாஜ்வாடி கட்சியும், அதன் தலைவர் முலாயம் சிங் அவர்களும் எதிர்த்திருக்கிறார் கள்.  அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக் கும், மலைவாழ் மக்களுக்கும்  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது  என்று சொல்லவில்லை,  அவர் ளோடு  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்து அந்தச் சட்டத் திருத்தத்தை கொண்டு வர வில்லையே என்று தான் கேட்டிருக்கிறார்.  இது நமக்கும் ஏற்புடைய கொள்கைதான்.  
இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்  நமது கழக நாடாளு மன்றக் கட்சித் தலைவர் தம்பி டி.ஆர். பாலு இதனை வற்புறுத்தியிருக்கிறார்.
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி
இதைப் பற்றி  திராவிடர் கழகத் தலைவர், மானமிகு இளவல் கி. வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கை ஒன்றையும் இன்று விடுத்துள்ளார்.  மசோதா மாநிலங்கள வையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  அமளி தொடர்ந்து அவையை ஒத்தி வைத்து உள்ளார்கள்.   மழைக்காலக் கூட்டத் தொடர் இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.    இந்த நிலையில்  இந்த முக் கியமான மசோதா நாடாளுமன்றத் தில் நிறைவேற அனைத்துக் கட்சி களும்  தங்கள் ஒத்து ழைப்பை நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள் கிறேன். - இவ்வாறு  கலைஞர் அவர் கள் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: