புதன், 4 ஜூலை, 2012

வீடியோ கேமில் த்ரிஷா மிகவும் செக்சியாக காட்டப்படுகிறார்

பிரபலமான நிறுவனத்தின் வீடியோ-கேம்கள் வந்த விரைவிலேயே விற்று தீர்ந்துவிடும். 
ஆனால் வளர்ந்துவரும் நிறுவனங்கள் தங்களது வீடியோ-கேம்களில் பிரபலமான நடிகைகளின் உருவத்தை பயன்படுத்தி தங்களது கேம்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும். அந்த நடிகைகளுக்கென ஒரு விலை பேசி கொடுத்துவிடுவார்கள். பெரும்பாலும் ஹாலிவுட்  ஹீரோயின்களின் உருவத்தையே அனைத்து நாட்டு வீடியோ-கேம் நிறுவனங்களும் பயன்படுத்திவந்தன. 
ஆனால் முதல்முறையாக இந்திய நடிகையான த்ரிஷாவின் உருவத்தை தனது வீடியோ-கேமில் பயன்படுத்தியுள்ளது ‘அட்லஸ்’ நிறுவனம். ’CATHERINE' என பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோகேமில் வரும் ‘கோல்டன் பிளேஹவுஸ்’ என்ற டிவி நிகழ்ச்சியினை தொகுத்துவழங்கும் பெண்ணாக த்ரிஷாவின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ-கேமில் த்ரிஷா என்ற பெயரையே உபயோகப்படுத்தியுள்ளனர். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் வீடியோ-கேமாக இல்லாமல் 18 வயதை தாண்டியவர்கள் மட்டும் விளையாடும் ’அடல்ட்’ வீடியோகேம் இது. த்ரிஷாவின் உருவமும் கவர்ச்சியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோகேமில் ஆக்‌ஷனுக்கு பஞ்சம் இருக்கிறதே தவிர கவர்ச்சியான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. 
வீடியோ கேமில் த்ரிஷா மிகவும் செக்சியாக காட்டப்படுகிறார் 
இந்த வீடியோ-கேமின் தன்மை தெரியாமல் ‘என் உருவமும் வீடியோகேமில் வந்துள்ளது’ என பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. “ஷூட்டிங்கிற்கே நேரம் சரியாக இருக்கிறது. அவர்களிடம் விசாரிக்க எனக்கு நேரமில்லை’ என இப்போது கூறும் த்ரிஷா, இந்த வீடியோ-கேமின் தன்மை அறிந்ததும் இப்படியே பேசுவாரா எனத் தெரியவில்லை

கருத்துகள் இல்லை: