புதுடில்லி: "ஏர்-இந்தியா நிறுவனத்தில், தேவைக்கு அதிகமாக, 256 பைலட்கள் உள்ளனர்' என, அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட
விமானங்களை, ஏர் இந்தியா நிறுவனமும், உள்நாட்டு விமானச் சேவையை இந்தியன்
ஏர்லைன்ஸ் நிறுவனமும் நிர்வகித்து வந்தன.
ஆனால், 2007ம் ஆண்டு, இவ்விரு
நிறுவனங்களும் இணைந்து, தற்போது ஏர்-இந்தியா நிறுவனமாக செயல்பட்டு
வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும், வெளிநாடு மற்றும்
உள்நாட்டு சேவைகளுக்கு, 494 பைலட்கள் போதுமானது. ஆனால், இருப்பதோ 750
பைலட்கள் என, ஏர்-இந்தியா நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய
வந்துள்ளது. இவர்களில் இந்திய பைலட்கள் கில்டு சங்கத்தில் உறுப்பினர்களாக
உள்ள பைலட்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மே 7ம் தேதி முதல், வேலை
நிறுத்தப் போராட்டம் நடத்தினர். போராட்டம் 58 நாட்கள் நீடித்தது. டில்லி உயர் நீதிமன்றம் தலையிட்டதால், போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட பைலட்களின் எண்ணிக்கை, 434 பேர். போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, உள்நாட்டு விமான சேவைகளையும், இந்நிறுவனம் நடத்தியது. போராட்டத்தில் பங்கேற்ற, 101 பைலட்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், இந்நிறுவனம் விமான சேவைகளை பெருமளவு சமாளித்து இயக்கிக் காட்டியது.
உள்நாட்டில் டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, இயக்கப்பட வேண்டிய விமான சேவைகள் 45. போராட்டம் காரணமாக, 45 சேவைகளில், 38 சேவைகளை, ஏர்-இந்தியா நிறுவனம் திறம்பட இயக்கியது. இந்நிறுவன பைலட்களில், வெளிநாடு விமான சேவையில் ஈடுபடும் பைலட்கள், 80 மணி நேரமும், உள்நாட்டு விமான சேவையில் ஈடுபடும் பைலட்கள், 72 மணி நேரமும், பணியாற்ற வேண்டும் என்பது தான் நிறுவன விதி. இதன் அடிப்படையில் தான், அவர்களுக்கான சம்பளம் மற்றும் அலவன்சுகள் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.
தேவை ஆனால் இருப்பதோ மக்களின் வரிப்பணம் கோவிந்தா கோவிந்தா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக