என்.எஸ்.ஜி.
எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படை (கறுப்புப் பூனைப் படை) தனது 900
கமாண்டோக்களை வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்புப் பணியில் இருந்து வாபஸ் பெறத்
தீர்மானித்துள்ளது.
அதற்குப் பதிலாக, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில்
ஈடுபட முடிவு செய்துள்ளது.கறுப்புப்
பூனைப் படை 1984-ல் உருவாக்கப்பட்டது. தீவிரவாத எதிர்ப்பு
நடவடிக்கைகளுக்காக இது அமைப்பட்ட போதிலும், உயிருக்கு ஆபத்து நிறைந்த
வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.
இப்படையின் வீரர்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு
பிரிவிலும் 900 பேர் இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில், என்.எஸ்.ஜி.யின் இயக்குநராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ராஜன் கே.மேதேகர் ஒரு புதிய செயல்திட்டத்தை உருவாக்கினார். அத்திட்டப்படி, இப்படையின் 11-வது பிரிவை வி.ஐ.பி. பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவித்து, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இப்படையின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்ற சுபாஷ் ஜோஷி இதை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.இப்போது பாதுகாப்பு அளிக்க வேண்டிய வி.ஐ.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தனது கமாண்டோக்களை மீண்டும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்போது என்.எஸ்.ஜி.யின் பாதுகாப்பு, 15 வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வி.ஐ.பி. பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவித்து, தீவிரவாத எதிர்ப்புப் பணிகளுக்கு இப்படையின் வீரர்கள் பயன்படுத்தப்பட உள்ளது இதுவே முதன் முறையாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக