வெள்ளி, 6 ஜூலை, 2012

I.G சிவனாண்டி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி நில மோசடி வழக்கில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் 12 ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் கடந்த 29ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் சிவனாண்டியின் சஸ்பெண்ட் 7-3-2012 முன்தேதியிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகின்றது. சிவனாண்டி சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட தலைமை விழிப்புப் பணி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரம் மிக்க பதவியான உளவுத்துறை எஸ்.பி.யாக வலம் வந்தவர் சிவனாண்டி. இதனால் முதல்வர் ஜெயலலிதாவிடம் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பெற்றவராக இருந்தார். அடுத்து திமுக ஆட்சி வந்த போது சில காலம் ஓரம் கட்டப்பட்ட அவர் பின்னர் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர் திமுக அனுதாபியாமக மாறிவிட்டார் என்று கூறி ஒதுக்கப்பட்டு வந்தார். தற்போது அதிமுக தலைமையின் அபிமானத்தை மீண்டும் பெற்றுள்ளார்

கருத்துகள் இல்லை: