Viruvirupu
போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, சி.பி.ஐ.-யால் விசாரிக்கப்பட்ட காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளருக்கு நிஜமாகவே இந்த விவகாரத்தில் எந்த தொடர்பும் கிடையாது என்று அடித்துச் சொல்கிறார்கள். தமது மேலதிகாரியின் உத்தரவை நிறைவேற்றியது மட்டும்தான் அவருக்கு இதிலுள்ள தொடர்பு எனவும், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இவர்கள் ‘மேலதிகாரி’ என்று குறிப்பிடும் நபர், இந்த வழக்கில் ஆவணங்களில் சில தில்லுமுல்லுகள் நடந்த நேரத்தில், அந்த மண்டலத்தின் ஐ.ஜி.யாக இருந்தவர். அவருக்கு இருந்த அரசியல் தொடர்புகள் காவல்துறை மட்டத்தில் மிகப் பிரபலம்.
சி.பி.ஐ.-யால் துணைக் கண்காணிப்பாளர் துருவித் துருவி விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த மேலதிகாரி தற்போது அலறியடித்துக் கொண்டு டில்லி சென்றிருக்கிறார் என்கிறார்கள். தமது தொடர்புகள் மூலம் சி.பி.ஐ. உயரதிகாரிகள் சிலரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் அவர்.
ரியல் சிக்கல் எப்போது வரும் என்றால், இந்த மேலதிகாரி மாட்டிக் கொண்டால், அவர் டாக்டர் ஐயாவை நோக்கி கைகாட்டி வடக்கூடிய அபாயம் உள்ளது.
எனவே டாக்டர் ஐயா, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள டில்லியில் ஆட்களை வலைவிசித் தேடும் நிலையில், காவல்துறை உயரதிகாரியையும் காப்பாற்ற முயற்சி எடுக்கிறார் என்கிறார்கள்.
இவர்களது முயற்சி வெற்றி பெறுமா?
எமது போலீஸ் தொடர்பாளர் ஒருவர், “நீங்கள் குறிப்பிடும் போலிஸ் உயரதிகாரியும், இந்த வழக்கை ஹான்டில் செய்யும் சி.பி.ஐ. உயரதிகாரி ஒருவரும், ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள்” என்று கண்ணடிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக